LTTE தளபதிகள் குடும்பத்துக்கு இன்றைக்கும் என் மனைவி கயல்விழி பணம் அனுப்புகிறார் : சீமான் ஓபன் டாக்!
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகள் பலரது குடும்பத்துக்கும் மனைவி கயல்விழி இன்றும் பண உதவி செய்கிறார் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் மறைந்த தடா சந்திரசேகரன் படத்திறப்பு நிகழ்வில் சீமான் பேசியதாவது: இப்ப சொல்லலாம்.. ஒன்றும் பிரச்சனை.. தம்பி சேரா, அண்ணன் தமிழ்ச் செல்வன் (மறைந்த விடுதலைப் புலிகளின் தளபதிகள்) குடும்பம்.. பல குடும்பங்களை நாங்கள் இங்கே எங்கள் மூத்தவர் (தடா சந்திரசேகரன்) கண்ணுக்கு கண்ணாக வைத்து, பாதுகாத்து நாங்கள் பத்திரமாக வேறு நாடுகளுக்கு அனுப்பி பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அத்தனை பணியையும் செய்தது மூத்தவர் தடா சந்திரசேகரன்.

புலிகள் தளபதி குடும்பத்துக்கு பணம் தருகிறோம்: சும்மா பேச்சு மட்டுமல்ல்..நாங்க பேசிட்டு அப்படியே போற கூட்டம் கிடையாது. இன்றைக்கும் என் மனைவி, அந்த இயக்க குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது, படிப்பு செலவுக்கு காசு அனுப்புவது... தவம் தவம்னு பேரு சொன்னாங்க.. அந்த நாட்டுல (இலங்கை ஈழத்தில்) நாங்க நிக்கும் போது தவா அண்ணா, தவா அண்ணான்னு வாக்கியில அந்த சப்தம் கேட்காமல் இருக்கவே இருக்காது. அந்த தவா அண்ணன் குடும்பம் எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியாது. அந்த தவா அண்ணன் குடும்பத்தை கொண்டு வந்து பாதுகாத்து..
விடுதலைப் புலி தளபதி தவா அண்ணன் குடும்பம்: நான் நிக்கும் போது (இலங்கை ஈழத்தில்) எனக்கு பயிற்சி கொடுத்து என்னோடு பாதுகாவலராக இருந்த புகழ்மாறன், அண்ணன் தவா. இருவரும் என்னை படுக்க வைக்க வைத்துவிட்டுப் போய் 5 நிமிசம் கூட இல்லை. அதிகபட்சம் 10 நிமிசம்.. சேரா எல்லோரும் போய்ட்டு கதறி அழுதுட்டு ஓடி வந்து என்னை கட்டிப்பிடிச்சு அழுகிறாங்க.. என்னனு கேட்டா போற வழியில் செல்லடிச்சுருச்சு... அந்த வெடிகணை அடிச்சு இறந்துட்டாங்க.. அந்த தவா குடும்பம் எங்க இருக்குன்னு யாருக்கும் தெரியாது. அதை வைத்து பாதுகாத்து எங்கள் மகள் சீனாவில் போய் மருத்துவம் படிக்க பணம் கொடுத்து உதவியது என் மனைவிதான். அவர்கள் திருப்பி வெளிநாட்டுக்குப் போறதுக்கு உதவுனதும் என் மனைவிதான்.

தமிழ்ச் செல்வன் குடும்பம்: உங்களால் நம்ப முடிகிறதா பாருங்க? என் அண்ணன் தமிழ்ச்செல்வன் (தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர்) மனைவி, எங்க அண்ணன் பிள்ளைக.. பேரு பின்னாடி பிரச்சனையில் மாறி இருக்கு. எங்க மூத்தவர் (தடா சந்திரசேகரன்) வீட்டுல அண்ணி இருக்காங்க.. போய் பார்த்துட்டு திரும்புறோம்.. ஒரு உறையில் வைத்து ரூ10,000 கொடுக்க காசில்லை.. கொடுத்துட்டு திரும்பி வந்து காரில் வரும் போது கயல் அழுகுது.. அக்கா (தடா சந்திரசேகர் மனைவி) வேணாம்னு சொல்லிடுவாங்கன்னு நினைச்சேன்.. ஆனால் நம்ம கிட்ட இருந்தது இவ்வளவுதான்.. கொடுத்தோம். ஆனா அவங்க வாங்கிகிட்டாங்கன்னா அவங்களுக்கு எவ்வளவு தேவை இருக்கும். அதுக்கு மேல நம்மளால கொடுக்க முடியலையேன்னு அழுதாங்க.. அந்த அளவுக்கு வலியை தாங்கிக் கொண்டு துன்ப துயரங்களை சுமந்து கொண்டிருக்கிற தமிழ்ச் சமூகத்தின் பிள்ளைகள் நாங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications