பாலியல் புகாருக்காக மரண தண்டனை கொடுத்த பிரபாகரன், சீமானை பரிந்துரைத்திருப்பாரா? கொளத்தூர் மணி நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ஈழத்துக்கு அனுப்பிய பிழைக்கு நான் ஒருவிதத்தில் பொறுப்பேற்கிறேன். சமூக அக்கறையுள்ள, தமிழ் உணர்வுமிக்க பல லட்சம் இளைஞர்கள் இன்று ஏமாந்து நிற்பது போல அன்று சீமானால் நானும் ஏமாந்திருக்கிறேன் என்பதற்காக வருந்துகிறேன்; பாலியல் ஒழுக்ககேடு புகாருக்காக தமது மெய்க்காவல் படை தலைவருக்கே மரண தண்டனை கொடுத்த பிரபாகரன் தமக்கு அடுத்ததாக சீமானை பரிந்துரைத்தார் என்பது பச்சை பொய் என்கிறார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி.

சன் நியூஸ் கேள்வி களம் நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தா.செ.மணி கூறியதாவது:

periyar seeman prabhakaran

என்னுடைய பரிந்துரையின் பேரில் சீமான் ஈழத்துக்கு சென்றார் என்பது அல்ல.. பரிந்துரைத்தது வேறு ஒருவர்தான். என்னிடம் விடுதலைப் புலிகள் கருத்து கேட்ட போது, எங்கள் திராவிடர் இயக்க மேடைகளில் தொடர்ந்து பேசி வருகிறார்; நம்ம கருத்துக்கு ஆதரவானவர்தான் என்று சொன்னது உண்மைதான். பிரபாகரனுடனான சந்திப்புக்காக பேசுகிற போதும் இதைத்தான் நான் சொன்னேன். அந்த கால கட்டத்தில் சீமான் அப்படித்தான் இருந்தார்; தற்போது சீமான் பேசுகிற பொய்கள் பொருத்தம் இல்லாதவை. பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்லுங்கடா போக்கத்தா பசங்களா.. என்கிற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடல் போலத்தான் சீமான் பேசுவதும்..

துணிச்சலாக பொய் சொல்லும் சீமான்

பிரபாகரன் குறித்து பல முறை சொல்கிற போதும், பெரியாரின் வளர்ந்த கைத்தடிதான் இப்போது நிமிர்ந்த துப்பாக்கியாக நிற்கிறது என்று சொன்னார் என்பதாக சீமான் சொல்லி வந்தார். அண்மையில் 7,8 ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் வந்து பெரியாரும் திராவிடமும்தான் நம்மை கெடுத்தது; திருட்டு பசங்க என சொல்லிவிட்டு சென்றார் போல.. துணிச்சலாக பொய் சொல்லக் கூடிய மனிதர் சீமான்.

சோ- குருமூர்த்தி பரிந்துரை

2011-ல் நாம் தமிழர் கட்சியின் பெயரை வாங்குகிற போது சோ- குருமூர்த்தி பரிந்துரையின் பேரில் சிவந்தி ஆதித்தனிடம் பெயர் வாங்கி இருக்கிறார்; ஆனால் அப்போது நம்மிடம் தொடர்பில் இருந்தவர்தான். 2009-ல் தலைவர் பிரபாகரன் இல்லை என்று தெரிந்த பின்னரும் கூட இந்த கதைகளை சொல்ல ஆரம்பிக்கவிலை. பிரபாகரன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டுதான் இந்த கதைகளை எல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சீமான்.

பாலியல் ஒழுக்க கேடு- மரண தண்டனை தந்த பிரபாகரன்

பிரபாகரனுக்கு அடுத்ததாக இருப்பவர் அவர் விரும்பிய கொள்கைகளை கொண்டிருப்பதுடன் பிரபாகர்ன் விரும்பிய நடத்தைகளையும் கொண்டிருக்க வேண்டும். 1989-ல் இந்திய அமைதிப்படை அங்கு இருந்த காலத்தில் ஈழத்துக்கு நான் சென்றிருந்தேன். அப்போது பிரபாகரன் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின. நல்வாய்ப்பாக பிரபாகரனை சந்திக்க அழைப்பு வந்தது. அப்போது பிரபாகரனை நாங்கள் சந்தித்து பேசுகிற போது.. எனக்கு நெருக்கமான 3 புலிகள் இயக்க தோழர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரித்தார். குறிப்பாக அவர் முதலில் சொன்னது தமது மெய்க்காவல் படைக்கு தலைவராக இருந்த தியாகு என்பவருக்கு பாலியல் ஒழுக்கக் கேட்டுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டதைத்தான் சொன்னார். விடுதலைப் புலிகள் ஒழுக்க நெறிகளைக் கொண்டவராகவே அறியப்பட்டனர். விடுதலைப் புலிகளைப் பற்றி இந்திய அமைதிப்படை தளபதிகள் நிறைய பேர் எழுதி இருக்கின்றனர். இவர்கள் யாருமே புலிகள் இயக்கத்தின் ஒழுக்க நெறிகளை குறை சொல்ல முடியவில்லை.

சீமான் பேசுவது பச்சை பொய்

அப்படி ஒழுக்கத்துடன் இருந்த ஒரு இயக்கத்தின் தலைவரான பிரபாகரன், இப்படிப்பட்ட ஒருவரை (பாலியல் புகாருக்கு உள்ளான சீமானை) தமக்கு அடுத்த நபராக பரிந்துரைத்தார் என சொல்கிற ஒன்றே சீமான் பேசுவது பொய் என்பது தெளிவாக தெரியும். இத்தகைய நபரை பரிந்துரை செய்கிற அளவுக்கு அறிவு குறைந்தவராகவா தலைவர் பிரபாகரன் இருந்திருப்பார்? என்கிற நினைக்கிற அளவுக்கு இருக்கிறது.

பாஜகவின் அஜெண்டாவில் சீமான்

தொடக்கத்தில் இருந்தே பாஜகவின் அஜெண்டாவுக்கு ஏற்பவே செயல்பட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜக நுழைவதற்கு தடையாக இருக்கிற பெரியார் என்ற கருத்தியல்; சிந்தனைப் போக்கை உடைத்தெறிய எதனை வேண்டுமானாலும் செய்யலாம்.. பெரியாரை பற்றி நீ எதில் படித்தாய் மடையா என கேட்டால் அதற்கு எச்.ராஜா பதில் சொல்வார்; அண்ணாமலை பதில் சொல்வார் என்கிறார் சீமான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+