Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சீமானின் நாம் தமிழர் கட்சி மீண்டும் உடைகிறதா ? கூட்டத்தை புறக்கணித்த 'மூத்தோர்’- தம்பிகள் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடையே யார் பெரியவர்? என்ற அதிகார சண்டை முற்றியிருப்பதாகவும் அண்மையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை 2 மூத்த நிர்வாகிகள் புறக்கணித்ததாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாம் தமிழர் கட்சி மீண்டும் பிளவுபடக் கூடும் என்கின்றன அந்த தகவல்கள்.

திராவிடர் இயக்க மேடைகளில் பெரியாரின் கொள்கைகளைப் பேசிய சீமான், ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து அதிகம் பேசினார். திரைப்பட இயக்குநராக இருந்த சீமானின் இந்த கொள்கை பேச்சு வெகுவாக ஈர்த்தது.

இதனால் சமாதான காலத்தில் தமிழகத்தில் இருந்து பலரையும் அழைத்தது போல சீமானும் விடுதலைப் புலிகளால் அழைக்கப்பட்டார். அப்போது பிரபாகரனுடன் சீமானும் மற்றவர்களைப் போல படம் எடுத்துக் கொண்டார். பின்னர் யுத்த காலத்தில் தாம் மீண்டும் ஈழத்துக்கு சென்றதாக சீமான் கூறி வருகிறார். அது தொடர்பான ஆதாரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சீமானின் நாம் தமிழர் கட்சி

சீமானின் நாம் தமிழர் கட்சி


மேலும் ஈழத் தமிழர் ஆதரவு பேச்சுகளுக்காக சீமான் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டார். 2009-ல் இலங்கையில் இறுதி யுத்தம் முடிந்த நிலையில் திராவிட இயக்கம், திமுகவுக்கு எதிராக சீமான் முழு வீச்சாக இறங்கினார். 2009-ல் நாம் தமிழர் என்ற சி.பா.ஆதித்தனாரின் இயக்கத்தை உயிர்ப்பித்தார். பின்னர் அதனை கட்சியாகவும் மாற்றினார். சீமான், நாம் தமிழர் கட்சியை தொடங்கியது முதலே அதிகார சண்டை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் தொடக்க கால மூத்த நிர்வாகிகள் பலரும் இப்போது நாம் தமிழர் கட்சியில் இல்லாமலேயே போய்விட்டார்கள்.

புதுக்கோட்டை முத்துகுமார் படுகொலை

புதுக்கோட்டை முத்துகுமார் படுகொலை

நாம் தமிழர் கட்சியை தொடங்கியவர்களில் சீமானுடன் இணைந்து நின்றவர் புதுக்கோட்டை சுபா.முத்துக்குமார். ஆனால் சுபா.முத்துக்குமார் 2012-ல் புதுக்கோட்டையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அப்போது சீமான் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. புதுக்கோட்டை முத்துகுமார் படுகொலை வழக்கில் கைதான 8 பேரும் விடுதலையாகிவிட்டனர். இது தொடர்பான வழக்கில் நாம் தமிழர் கட்சி மேல்முறையீடு செய்ததா? என்பதும் தெரியவில்லை.

Recommended Video

    ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க - வேல்முருகன் அறிவுரை
    நாம் தமிழர் கட்சியில் பிளவு

    நாம் தமிழர் கட்சியில் பிளவு

    இதன்பின்னர் 2015-ல் நாம் தமிழர் கட்சியின் ஊடக முகமாக இருந்த சர்வதேச ஊடகப் பொறுப்பாளரும் மூத்த பத்திரிகையாளருமான அய்யநாதன் தலைமையில் 13 மாவட்ட பொறுப்பாளர்கள் சீமானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அப்போது "தமிழ் நாட்டை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதையும் மீறி காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீத்தேன் ஆய்விற்காக தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மீத்தேன் திட்டத்தை எதிர்த்து போராடி, அந்த குழாய்களை பிடுங்கி எரிந்த சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாறன் உட்பட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். சீமான் கட்சியில் பிளவு: எதிராக களமிறங்கும் முக்கிய நிர்வாகிகள். அவர்களுக்காக சீமான் ஒரு கண்டன அறிக்கை கூட வெளியிடவில்லை. அதேபோல் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் சிறை சென்ற ராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கவி.இளங்கோ கைது செய்யப்பட்டதற்கும் ஒரு கண்டன அறிக்கை கூட சீமான் வெளியிடவில்லை" என கொந்தளித்தார் அய்யநாதன்.

    சீமான் கட்சி உடைந்தது

    சீமான் கட்சி உடைந்தது

    சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் இதர ஊடக முகங்களாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி, பேராசிரியர் கல்யாணசுந்தரம் ஆகியோர் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி பிரமுகர்களுக்கு எதிராக பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அக்கட்சியில் இருந்து விலகினர். அத்துடன் ராஜீவ்காந்தி திமுகவிலும் கல்யாணசுந்தரம் அதிமுகவிலும் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியிலிருந்து வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் உட்பட சுமார் 400க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர். அப்போது கருத்து தெரிவித்த சீமான் "என் வாழ்க்கையிலேயே இப்படியொரு துரோகத்தை, நயவஞ்சகத்தைக் கண்டதில்லை. எதிரிகளால் வெட்டப்பட்டு சாவேனே தவிர, துரோகிகளின் சிறு கீறலைக்கூட ஏற்க முடியாது. சவால் விடுகிறேன்... கட்சியை இரண்டாக உடைத்துப்பாருங்கள் என சவால்விட்டார்.

    நூதன அதிகார மோதல்

    நூதன அதிகார மோதல்

    இந்நிலையில் மீண்டும் நாம் தமிழர் கட்சியில் அதிகார மோதல் வெடித்துள்ளது. இந்த அதிகார மோதல் நூதனமானதும் கூட. நாம் தமிழர் கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் சர்ச்சைப் பதிவுகளை மட்டும் போட்டுவிடுவர். அதற்கு பதில் வரும்போது எந்த எதிர்வினையும் கொடுப்பது இல்லை. இப்படி சர்ச்சை பதிவுகளைப் போட்டு அதிக விமர்சனத்துக்குள்ளாவது யார் என்பதுதான் அந்த நூதனமான போட்டி. இதில் ஒருவர் கையே ஓங்கி இருப்பதாக மூத்தவர்கள் 2 பேர் பொங்கி இருக்கின்றனர் அண்ணன் சீமானிடம். இது தொடர்பான பஞ்சாயத்து உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான அக்டோபர் 12-ந் தேதி இரவு சீமானின் வீட்டில் நடந்துள்ளது. ஆனால் இந்த கூட்டத்துக்கு நாங்க வரமாட்டோம் என 2 மூத்தவர்கள் புறக்கணித்துவிட்டனராம். கூட்டத்துக்கு ஏன் நீங்க வரவில்லை மூத்தவரே என கேட்டதற்கும் தம்பிகளுக்கு இருவரும் தெளிவான பதிலை சொல்லாமல் இருந்துள்ளனர்.

    மீண்டும் இன்னொரு பிளவு?

    மீண்டும் இன்னொரு பிளவு?

    பின்னர் அவர்களை சீமான் தொடர்பு கொண்டு பேசினாராம். அப்போதுதான் சமூக வலைதளங்களில் அவர் இஷ்டத்துக்கு போட்டுவிட்டு ஓடிவிடுகிறார். பதிலும் சொல்வதில்லை. அதிகமான விமர்சனம் செய்யப்படுவதால் அவரே தம்மை பெரிய ஆளாக நினைத்து கொண்டிருக்கிறார். இப்போது ஊடகங்களையும் அழைத்து என்னை பேட்டி எடுங்க என கெஞ்சி பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். அவருக்கு கடிவாளம் போட முடியாமல் அவருடைய பதிவுகளை நாங்கள் ரீ ட்வீட் செய்கிற நிலைமைக்கு ஆளாகிவிட்டோம். எங்களால் வளர்த்துவிடப்பட்ட தம்பி எங்களை மிஞ்சிக் கொண்டிருக்கிறான் என பொறுமி இருக்கின்றனர். இதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் சீமான், கொஞ்சம் பொறுங்கப்பா.. உங்க ரெண்டு பேரும்தான் என்னோட எப்பவும் இருப்பீங்கன்னு நம்பிகிட்டு இருக்கேன் என ஆதங்கத்துடன் போனை வைத்துவிட்டாராம். ஆனாலும் அண்ணன் கண்டிக்கிறேன்னு சொல்லலை.. எங்களை கேட்டுதான் இனி செய்யனும்னு சொல்லலை.. அப்ப அந்த தம்பியை எங்களுக்கு எதிராக கொம்பு சீவுகிறாரா? இப்படித்தானே எல்லாரையும் வெளியேற்றினாங்க.. அடுத்த டார்கெட் நாங்கதானா? என விழிபிதுங்கியபடி கேட்க்கின்றனராம் சீமானுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அந்த 2 மூத்தவர்களும்! இதில் மிக முக்கியமானது ராஜீவ் காந்தியும் கல்யாணசுந்தரமும் வெளியே செல்லும் போது இந்த 2 மூத்தவர்கள் மீது குற்றம்சாட்டினார்கள் என்பதுதான்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+