காங்கிரசுக்கு அனுதாபத்தை தேடி தந்த சீமான் பேச்சு... அதிமுக அதிர்ச்சி
Recommended Video
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல அனுதாபத்தை பெற்றுத்தந்துள்ளதாம்.
கடந்த 13-ம் தேதி இரவு விக்ரவாண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சீமான், ராஜீவ்காந்தியை நாங்க தான் கொன்றோம் எனப் பேசியிருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. இந்நிலையில் சீமான் தெரிந்து பேசினாரோ தெரியாமல் பேசினாரோ, ஆனால் அந்தப் பேச்சு நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனின் வெற்றிக்கு கைகொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனால் அதிமுக முகாம் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளதாம். சீமானின் பேச்சுக்கு பிறகு காங்கிரஸ் நிர்வாகிகள் அதை வைத்தும், சீமானை கண்டித்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பொதுவாகவே நாங்குநேரி காங்கிரஸ் கட்சிக்கு சாதகமானது எனக் கூறப்படுவதுண்டு. அதிலும்,ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டதை மீண்டும் அவர்களுக்கு நினைவுப்படுத்தினால் கேட்கவா வேண்டும், நாளுக்கு நாள் காங்கிரஸ் முகாமிற்கு ஆதரவு அதிகரிக்கிறதாம்.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நாங்குநேரியில் முகாமிட்டு இடைத்தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிமுக அமைச்சர்களுகு சீமான் மீது கடும் கோபமாம். வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் பானையை போட்டு உடைத்த கதையாக, அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்ககோரி மக்களிடம் பிரச்சாரம் செய்து அவர்களை தயார் படுத்தி வைத்திருந்தால், கடைசியில் சீமான் இப்படி பேசி காங்கிரசுக்கு அனுதாபத்தை தேடிக்கொடுத்து விட்டாரே என்று புலம்புகிறார்களாம்.
இதனிடையே சீமான் பேச்சுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தனது பேச்சை திரும்பப்பெற போவதில்லை என்பதில் அவர் உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி











Click it and Unblock the Notifications