அரசியல் எதுக்கு? இமயமலைக்கு போலாம்-பேரன் பேத்திகனு விளையாடலாமே- ரஜினிகாந்துக்கு சீமான் நச் அட்வைஸ்
சென்னை: வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதிலிருந்து அவர் மீதான முரண் நீங்கியது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகளை நாம் தமிழர் கட்சியினர் நடவு செய்துவருகிறார்கள். கடந்த ஆண்டும் இதே போல பல லட்சம் பனைவிதைகளை நடவு செய்த நாம் தமிழர் கட்சி, இந்த ஆண்டும் தொடர்ச்சியாக இந்த விழாவை முன்னெடுத்து செய்து வருகிறது.
இந்த நிலையில் அம்பத்தூர் தொகுதி, சதாக்குளம் பகுதியில் நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனைத் திருவிழாவை தொடங்கி வைத்தார் சீமான்.

ரஜினிகாந்த்
அப்போது அவர் கூறுகையில் புகழ்ச்சியை மட்டுமே பார்த்த ரஜினியால் நாங்கள் சந்திப்பதை போன்ற அவச்சொற்களை சந்திக்க முடியாது. வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதிலிருந்து அவர் மீதான முரண் நீங்கியது என சீமான் தெரிவித்துள்ளார்.

பச்சை தமிழன்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது சீமான் அவரை கடுமையாக எதிர்த்தார். அது ஏன் என கேட்டபோது ரஜினிகாந்த் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் ஒரு பச்சை தமிழன் மட்டுமே எங்களை ஆள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கிருஷ்ணகிரி
இந்த நிலையில் ரஜினிகாந்தோ தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என ஒரு ரசிகர்கள் முன் தெரிவித்திருந்தார். எனினும் அதை சீமான் உள்ளிட்டோர் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் அண்மையில் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தார்.

நிலைப்பாடு
அப்போது அவர் கூறுகையில் நான் கட்சி ஆரம்பித்தால் கட்சி என்னிடமும் ஆட்சி வேறு ஒருவரிடமும் இருக்கும். நான் கைகாட்டும் நபரே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றார். இதை தொண்டர்கள் ஏற்க மாட்டோம் என கூறிய நிலையில் ரஜினியும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications