பிரபல நடிகைக்கு 7 முறை அபார்ஷன்.. தமிழிசை எங்கே போனாங்க? சீமான் மீது தனி கேஸ் போடுங்க! யார் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆபாசமாக பாலியல் வக்கிரத்தோடு, பெண்களை அவமதிக்கும் வகையில், பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசுகிற சீமானை, ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும் என்றும், அவரது ஆபாச பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பெண் தலைவர்கள் கோரிக்கை விடுக்க துவங்கியிருக்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு, கடந்த சில நாட்களாகவே கொதிப்பையும், கொந்தளிப்பையும் தந்து வருகிறது.. ஏற்கனவே, பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சை கருத்துக்களை கண்டு, திராவிட கட்சிகள் மற்றும் பெரியாரிய உணர்வாளர்களை கொதிப்பில் உள்ளார்கள். திக, திமுக, பெரியாரிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் சீமான் மீது புகார் தந்து நடவடிக்கை கோரி வருகிறார்கள்.

Seeman Actress NTK Leader seeman

நடிகை குறித்து வக்கிர பேச்சு

ஒருகட்டத்தில் சீமானின் வெறுப்பு பேச்சை கேட்டு, நாதக நிர்வாகிகளே ஒவ்வொருவராக விலகி கொண்டிருக்கிறார்கள்.. இதனால் கட்சியே கரைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் சூழலில்தான், நடிகையின் பாலியல் வழக்கு சம்பவம் வெடித்து கிளம்பியிருககிறது.

இதில், நடிகை குறித்து சீமான் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளும், தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கின்றன.. ஒரு பெண் என்பதைகூட நினைக்காமல், தன்னை சுற்றிலும் இத்தனை பெண்கள் இருக்கிறார்களே? என்றுகூட நினைக்காமல் படு ஆபாசமாக பேசியிருந்தார் சீமான். பல ஊடகங்கள் அந்த பேச்சுக்களை மியூட் செய்து ஒளிப்பரப்பும் அளவுக்கு, ஒரு கட்சி தலைவர் பேசியது, அதிர்ச்சியையும், வருத்தத்தையும், கவலையையும் மக்களுக்கு தந்து கொண்டிருக்கிறது.

சோளக்காட்டுல வச்சி

'என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்காந்துட்டு இருக்குற புள்ளைய, தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுகட்டா கற்பழிச்சு விட்டமாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. நடிகையை அச்சுறுத்தி நான் 7 முறை கருக்கலைப்பு செய்தேனா? அது உண்மையென்றால் அதுவும் ஒரு சாதனையே.. ஒரு வருஷத்தில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளரும் நான்தான்..

என்று பேசியிருந்தது, உச்சக்கட்ட கொதிப்பை பெண்களிடம் எழுப்பி வருகிறது.. எனவே, சீமானின் முகம் சுளிக்கும் வகையிலான இந்தப் பேச்சிற்காக காவல்துறை அவர் மீது தனியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பெண் அரசியல் பிரமுகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

காங்கிரஸ் எம்பி கண்டனம்

காங்கிரஸ் எம்பி சுதா, "தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல, அநாகரீகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் சீமான். அயோக்கியர்கள் கூட பேசத் தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேல், வயசுக்கு வந்த பெண்ணையா கற்பழித்தேன் என பெண்களை சுற்றி உட்கார வைத்துக் கொண்டு எள்ளலான உடல் மொழியில் பேசியது, பெண்களுக்கு எதிரான வன்முறையை இயல்பான ஒன்றாகப் பார்க்கும், இயல்பான ஒன்றாக மாற்றும் வக்கிர புத்தி அதில் ஒன்றுமில்லை.

பெண்களைச் சுற்றி உட்கார வைத்துக் கொண்டு பேசியதன் மூலம், சமூகத்திற்கு என்ன சொல்ல நினைக்கிறார் சீமான்? தமிழ்ச்சமூகத்தில் இடம் கொடுக்கப்படாமல் அவர் விரட்டப்பட வேண்டும். அவர் எங்கள் தீம் பார்ட்டனர் (Theme Partner) என்று சொன்ன தமிழிசை சவுந்திரராஜன் இப்போது என்ன சொல்லப் போகிறார்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

திமுக பத்ம பரியா, உ.வாசுகி

சிபிஎம் மூத்த தலைவர் உ.வாசுகி சீமானின் பேச்சை கண்டித்து, தீக்கதிர் நாளிதழில் கண்டித்து கட்டுரையே எழுதியிருக்கிறார்.. "கலப்படமற்ற அசலான குரூரமான ஆணாதிக்க மூளை சீமானுக்கு..ஒரு கட்சியின் தலைவர், ரேப் அக்யூஸ்டு... இத்தனை விசாரணைக்குப் பின்னுமா ரேப் சட்டம் தெரியவில்லை? பாதிக்கப்பட்டவரை வேறு நக்கல் செய்கிறார், நாதக உறுப்பினர்கள் இதற்காகவே கூண்டோடு விலக வேண்டும்" என்கிறார்.

திமுக பத்ம பிரியா சொல்லும்போது, "இப்போதுதான் பெண்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது. பணி இடங்களில் நல்ல அங்கீகாரம், சமநிலை போன்றவை கிடைக்கிறது. ஆனால் இப்படிப்பட்டவர்களின் சில வார்த்தைகளால் அவை அனைத்தும் தகர்ந்துவிடும்போல இருக்கிறது. மனதில் என்ன இருக்கிறதோ அதுதான் வார்த்தையாக வரும். பெண்களை அருகில் வைத்துக் கொண்டே இப்படிப்பட்ட வார்த்தைகளை பேசி இருக்கிறார் என்றார்.

காங்கிரஸ் ஜோதிமணி, விசிக ஷர்மிளா

காங்கிரஸ் ஜோதிமணி சொல்லும்போது, இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக் கேடானது. பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார். அவரைப் பொறுத்தவரை பெண்ணை தூக்கிப்போய் பாலியல் வன்கொடுமை செய்யாமல் வேறு எவ்விதமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டாலும் அது பிரச்சனையில்லை. எவ்வளவு வக்கிரமான மனநிலை.

ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு அவரை ஏமாற்றுவதும் சட்டப்படி கடுமையான குற்றமே என்பதை சட்டம் சீமானுக்குப் புரிய வைக்கும். பாலியல் வக்கிரம் பிடித்தவர்களுக்கு, பெண்களை கேவலமாக நினைப்பவர்களுக்கு பொதுவாழ்வில் இடம் தரக்கூடாது. இந்த பேச்சிற்காக காவல்துறை சீமான் மீது தனியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அரசியல் விமர்சகரும், நடிகையுமான டாக்டர் ஷர்மிளா, "சீமானுக்கு எவ்வளவு திமிரு, ஆணவம், எகத்தாளம் இருந்தால் , ஒரு பாலியல் குற்றத்தை செய்தேன் என்று ஒத்துக்கொண்டு, அந்த விஷயத்தை சாதாரணமாக ஆக்க பார்க்கிறார். அந்த இடத்தில் ஒரு பெண்ணுக்காவது சுயமரியாத இருந்திருந்தால், அந்த பெண்ணின் இடத்தில் இருந்து, சீமான் நம்மை இப்படி பேசி இருந்தால் நாம் எப்படி பாதிக்கப்பட்டு இருப்போம் என்று ஒரு நிமிடம் யோசித்து இருக்க வேண்டும். அவரின் பேச்சைக் கண்டித்திருக்க வேண்டும். அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு கூடவா சுயமரியாதை இல்லை?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+