சீமானுக்கு செம தில்லு.. ஒரே ஒரு கையெழுத்து.. ஒரே சின்னம்.. போட்டுட்டு படுத்துக்கங்க.. பளிச் பேச்சு

சீமானின் பிரச்சாரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே ஒரு விவசாயி சின்னத்துக்கு போட்டுட்டு படுத்துக்குங்க.. நான் எப்படி இந்த நாட்டை கொண்டு வர்றேன்னு மட்டும் பாருங்க" என்று சீமான் பிரச்சாரம் செய்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது.. அந்த வகையில், நேற்று மதுரையில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

"நாம் என் நிலமும், வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை நிறுவ வேண்டும்.. தமிழ் படித்தால் வேலை கிடைக்குமான்னு கேட்காதே. தமிழ் படித்தால்தான் வேலை கிடைக்கும்.. நீ எதுக்கு இங்கிலீஷ் படிக்கிறே? வெளிநாட்டில் வேலை செய்யறதுக்கா? அப்படின்னா ஏன் இங்கே கேட்கிறே? ஏன் இந்தி படிக்கிறே? வடநாட்டில் போய் வேலை பாக்கவே? அப்போ அங்கே போயிடு? இங்கே ஏன் வேலை கேட்கிறே..

 வடஇந்தியா

வடஇந்தியா

அவங்களே ஒன்றரை கோடி பேர் சோம்பப்படி வித்துக்கிட்டு, குல்பி ஐஸ் வித்துக்கிட்டு, போர்வை வித்துக்கிட்டு திரியறான்.. எந்த விடுதிக்கு போனாலும், "ஹே"ன்னு கூப்பிடறான்.. இங்கே எப்படா வந்தீங்க நீங்க எல்லாரும்? போன வாரம் எங்க ஆளு இருந்தானே? எங்கடா அவன்? உழைப்பில் இருந்து என் ஆட்களை வெளியேற்றிவிட்டீர்கள்.

 பொது சொத்து

பொது சொத்து

முதலில் திட்டமிட்டு நம் தாய்மொழியில் இருந்து வெளியேற்றினார்கள்.. கல்வி, மருத்துவம், குடிநீர், சுகாதாரம், எல்லாம் அரசுக்கு பொதுசொத்தாக எப்பவுமே இருக்கணும்.. தவிச்ச வாய்க்கு தண்ணி கூட தர முடியாத அரசு ஒரு அரசா? அப்படி ஒரு அரசு இருந்தால் என்ன? செத்தால் என்ன?

மீனவன்

மீனவன்

ஒருமுறை ஆட்சியை என்கிட்ட குடுங்க.. எங்க மீனவர்களை சுட்டு இங்கே கரை ஒதுக்கின மாதிரி, அவன் செத்து அங்கிட்டு கரை ஒதுங்குவான்.. இதுக்கு என்ன காரணம்? அவனுக்கு ஆள் தெரியுது.. ஓ.. இவன் கருணாநிதி, ஜெயலலிதா, எம்ஜிஆரை பார்த்து வந்த ஆள் இல்லை.. இவனை வளர்த்து விட்ட ஆள் வேற ஆள்..ன்னு அவங்களுக்கு தெரியும்.

 ஆசை இருக்கு

ஆசை இருக்கு

சிறந்த நாடாக என் நாட்டை மாற்ற என்னால முடியும்.. எனக்கு நிறைய ஆசை இருக்கு.. என் அண்ணன் எனக்கு காசு தரல. கனவை தந்துட்டு போயிருக்கார்.. அந்த கனவை என் தம்பி தங்கைகளுக்கு கடத்திக்கிட்டு இருக்கேன்.. உறுதியாக நாங்கள் வெல்லலாம்.. சத்தியத்தின் பிள்ளைகள் நாங்கள் வெல்லுவோம்.

 இரட்டை இலை

இரட்டை இலை

உங்களுக்கு எந்த சிரமத்தையும் நான் தரல.. ஒன்னே ஒன்னுதான் கேட்கிறேன்.. விவசாய சின்னத்தில் ஒரு ஓட்டு போட்டுட்டு நீங்க படுத்துக்குங்க.. நான் நாட்டை எப்படி கொண்டு வர்றேன்னு மட்டும் பாருங்க.. என் பங்காளி வடிவேலு வெற்றிக்கொடி கட்டு படத்துல சொல்லுவார் இல்லை, "இதுல ஒரு கையெழுத்து, இதுல ஒரு கையெழுத்து.. போட்டாச்சு போட்டாச்சு"ன்னு.. அந்த மாதிரி, சூரியனுக்கு போட்டாச்சு.. இலைக்கு போட்டாச்சு.. ஆனால் விவசாயிக்கு? விவசாயியே விவசாயிக்கு போடலேன்னா, வெளிநாட்டுக்காரனா வந்து போடுவான் ஓட்டு?" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+