பாலியல் பலகாரம்னு சொல்றாரு ஸ்டாலின்.. எழுதி படிச்சு பார்த்துட்டு அப்பறம் பேசலாம்ல.. சீமான் கிண்டல்

பாலியல் பலகாரம்னு ஸ்டாலின் சொல்வதாக சீமான் கிண்டல் அடித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பார்த்து படிக்கும்போதே படித்த பட்டதாரிகள்னு சொல்ல வரல. படித்த பொட்டதாரிகள்னு சொன்னா எப்படி? பாலியல் பலாத்காரம்னு சொல்ல வரல.. பாலியல் பலகாரம்னு சொல்றாரு" என்று முக ஸ்டாலினை சீமான் விமர்சித்துள்ளார்.

இலங்கை குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு சீமான் பேசியபோது, திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

"இந்த 5 ஆண்டு கால ஆட்சியில நாட்டின் பிரதமர் ஒன்றைக்கூட சாதனைக்கு சொல்ல முடியல. என்னை சௌக்கிதார்.. காவலாளின்னு சொல்லுங்கன்னு சொல்றார்.. வாங்க.. எங்க வீட்டுக்கு ஒரு வாட்ச்மேன் தேவைப்படுது!

காவலாளியா நீ?

காவலாளியா நீ?

உங்கள மாதிரி செக்யூரிட்டியை போட்டால் நாங்க என்ன செய்றது? ராஜா.. நான் வாட்ச்மேன் போடறது திருடனை விரட்டி பிடிக்க இல்லை ராஜா.. திருடன் வரும்போதே பிடிக்கறதுக்குதான்! குண்டுபோட்டு வந்தேன்னு சொல்றாங்க.. அவன் சுட்டு போட்ட வீரனை எல்லாம் காட்டினியே.. நீ சுட்ட ஒருத்தனையாவது காட்டு! எப்படிப்பட்ட காவலாளி நீ?

துயரங்கள்

துயரங்கள்

அதுவும் எச்.ராஜாவெல்லாம் சௌக்கிதார் போட்டிருக்காரு. உலகக்கொடுமை.. எல்லா துயரங்களையும் தாண்டி சிரிப்பு காட்டறாரு இவரு! எவ்வளவு வலி இருந்தாலும் இவங்களால நம்மை சிரிக்க வெச்சிட முடியுது.

கொத்துசாமி

கொத்துசாமி

இந்த பக்கம் ஒரு கோஷ்டி இருக்கு! அம்மாவும் 40 திருடர்களும் இருந்தாங்க.. இப்போ அம்மா போயிடுச்சு.. கொத்துசாவி திருடனுங்க கையில போயிடுச்சு. இஷ்டத்துக்கு திறந்துக்கறாங்க.. எடுத்துக்கறாங்க.. பூட்டிக்கிறாங்க!

விவசாயி சின்னம்

விவசாயி சின்னம்

இந்த கோஷ்டி எப்படியாவது அடிச்சி பிடிச்சு தேர்தல்ல மேல போயிடலாம்னு பார்த்தாங்க. ஆனா, மான தமிழ் மக்கள், நல்ல ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பிறந்தவர்கள், குடும்பம் குடும்பமாக வந்து விவசாயி சின்னத்துக்கு ஓட்டு போட்டு போயிட்டான்.

பாலியல் பலகாரம்

பாலியல் பலகாரம்

திமுகக்குள்ளேயே இது நடந்தது. அவங்களும் எத்தனை நாள்தான் இந்த ஃபிராடுதனத்தை சகிச்சுப்பாங்க? பார்த்து படிக்கும்போதே படித்த பட்டதாரிகள்னு சொல்ல வரல. படித்த பொட்டதாரிகள்னு சொன்னா எப்படி? பாலியல் பலாத்காரம்னு சொல்ல வரல.. பாலியல் பலகாரம்னு சொல்றாரு. எங்க அண்ணன் திருமாவளவன் சனாதன தர்மத்தை எதிர்த்து ஒரு மாநாடு நடத்தறார். ஆனா சனாதனம்னு சொல்ல வரல. சதாசந்தனம்னு சொல்றாரு.

கிளம்பறாங்க

கிளம்பறாங்க

அவங்களும் பார்த்தாங்க.. இது என்னடா பெரிய கொடுமையா இருக்கு. இன்னும் நாம கூட இருந்தா மானத்தை கெடுத்திடுவாங்கன்னு சொல்லிட்டு அங்கிருந்து கிளம்பறாங்க ஆளாளுக்கு. உங்க சகாப்தம் முடிஞ்சிடுச்சு.. இனி ஒன்னும் செய்ய முடியாது. 2 முறை எழுதி, சரியா படிச்சு பார்த்துட்டு அப்பறம் பேசனா என்ன? நான் குறையா சொல்லல? ஆனா இதை குறையை தலைவன்னு சொல்றவங்க சரி செய்துக்கணுமா இல்லையா?

வென்றிடு பார்க்கலாம்

வென்றிடு பார்க்கலாம்

சரியான கட்சி திமுகன்னா, நான் அடுத்த சட்டமன்ற தேர்தல்ல 234 தொகுதியிலும் போட்டியிடறேன்.. நீ தனிச்சு போட்டியிடு பார்க்கலாம்! ஓட்டு போடக்கூட இப்போ காசு குடுத்துட்டே சரி.. ஆனா வென்றிடு பாக்கலாம்." என்று பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+