விஜயலட்சுமி, வீரலட்சுமி எதுக்கு? "அந்த லட்சுமிகள்" 10, 10 பேரை அனுப்புங்க.. சமாளிக்கிறேன்: சீமான்
சென்னை: நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியை அனுப்புகிறவர்கள் 10,10 தனம் மற்றும் தைரிய லட்சுமிகளை அனுப்பட்டும் சமாளிக்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் கொடுத்துள்ளார்.
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி, திருமண மோசடி- 7 முறை கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட புகார்களைத் தெரிவித்துள்ளார். நடிகை விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தீவிரமான ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இதனால் விஜயலட்சுமி விவகாரத்தில் வீரலட்சுமிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று இருதரப்பும் மோதலில் இறங்கியது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: சீமான் என்கிறவன் ஏதோ சோன் பப்டி விற்க வந்தவன் மாதிரியும், பானி பூரி விற்க வந்த பையன் மாதிரியும் என்ன வேணும்னாலும் பேசலாம்?
1 லட்சம் துப்பாக்கிகளை கடந்தவன்: நான் முதலில் யார்னு தெரியுமா? டேய்... 1 லட்சம் துப்பாக்கிகளைக் கடந்து போய் என் தலைவனை (பிரபாகரன்) பார்த்துட்டு வந்தவன். என் உயிரும் ஒன்னுதான்.... ஒன்னுதான்.. எதுக்கும் கவலைப்படமாட்டேன். என்னை பார்த்தா பயப்படுற ஆள் மாதிரி தெரியுதா? ஜெயிலில் போடுவ.. போடு.. அதுக்கு அப்புறம் வெளியில விடுவதானே? அதுக்கு அப்புறம் நான் உன்னை விட்றுவனா?
அந்த பொம்பளை யாரு?: சும்மா.. முதல்ல அந்த பொம்பளை யாரு? ஏன் இந்த விஜயலட்சுமி, வீரலட்சுமின்னு அனுப்பி கிட்டு இருக்க? எனக்கு பிறப்புல, ரத்தத்துல வீரம் இருக்கு. நான் ஏற்றுக் கொண்ட தலைவன், வீரமே உருவமாக இருந்தவன். அவரோட மகன் நான். எனக்கு வீரம் எல்லாம் இருக்கு. வேண்டாம்.. இரண்டு லட்சுமியும் திரும்ப போயிடுங்க..
"அந்த லட்சுமிகளை" அனுப்புங்க: என்கிட்ட இல்லாதது பணம்தான். எனக்கு தன லட்சுமியும் தைரிய லட்சுமியும் அனுப்பிவிடு.. 10 கூட அனுப்பு.. சமாளிக்கிறேன். 10 தனலட்சுமி, 10 தைரிய லட்சுமியை அனுப்பிடுங்க.. சும்மா ஏதாவது பூச்சாண்டி காட்டிகிட்டு..
அவதூறால அழிவேனா?: ஒருத்தர் கூட ஏய்.. யாரும்மா நீன்னு கேட்கலையே.. கர்நாடகாவில் உட்கர்ந்துகிட்டு எல்லாம் தெரியாம பேசிட்டேன்னு மன்னிப்பு கேட்குற.. எல்லாம் நீ ரசிக்கிற.. நானும் அதை ரசிக்கிறேன். நான் விழுந்துடனும், ஒழிஞ்சிடனும்னு நினைக்கிற.. ஏ.... அவதூறால் அழிஞ்சு போறவனா நானு? இவ்வாறு சீமான் கூறினார்.
-
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications