அசரலையே சீமான்.. போலீசுக்கு ஓடிய இஸ்லாமிய அமைப்புகள்.. திமுகவின் முஸ்லிம் ஓட்டுக்கு குறி?.. அப்ப பாஜக
சென்னை: சீமான் மீது புகார்கள் வெடித்து வரும்நிலையில், மற்றொருபுறம் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அவரது பிரச்சார பேச்சின் வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து, இருவேறு கருத்துக்கள் சோஷியல் மீடியாவில் வலம்வர துவங்கி உள்ளன.
மணிப்பூரில் விவகாரத்தை கண்டித்து, கடந்த ஜூலை 30-ம் தேதியன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.. அப்போது பேசிய அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் குறித்து விமர்சித்து கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சர்ச்சை: "ஏதோ ஒரு ஓரத்தில் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்காக நாம் பேசுகிறோம்.. இதுல நமக்கு எந்த லாபமும் இல்லை. மணிப்பூரில் இருக்கும் கிறிஸ்தவர்களும் ஓட்டு போட போறதில்லை... இங்க இருக்க கிறிஸ்தவர்களும் ஓட்டுப்போடப் போறதில்லை. நாம நினைச்சுக்கிட்டிருக்கோம், இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தேவனின் குழந்தைகள்னு. ஆனா, அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல வருடங்களாகிவிட்டது.

இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதிக்கும் அக்கிரமத்திற்கும் பெரிய பொறுப்பேற்க வேண்டியவர்கள் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்கள்தான்...
தொடர்ச்சியாக பல வருடங்கள் 18 சதவித வாக்குகளை திமுகவுக்கு போட்டு, காங்கிரசுக்கு போட்டு நாட்டை தெருவில் போட்டது இவர்கள்தான். சகிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீரழிவான நிர்வாகம் ஆகியவற்றுக்குக் காரணம் இவர்கள்தான். இவர்களிடம் போய் என்ன பாவத்தை ஒப்புக்கொடுப்பது. பாவத்தையே பெரும்பான்மையாக அவர்கள்தானே செய்கிறார்கள்?" என்று கேட்டிருந்தார்.
விளக்கம்: இதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே? என்று சொல்லிட்டே இருப்பாங்க" என்றார்.
சீமானின் இந்த பேச்சுக்கு பெரும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.. மூத்த தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா உட்பட நடிகர் ராஜ்கிரண் வரை சீமானின் மீது கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர். இணையத்திலும் சீமான் மீதான காட்டம் வெளிப்பட்டு கொண்டேயிருக்கிறது.
சீமானின் தந்திரம்: "பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும், அதன் மூலம் பாஜக வெற்றிபெற வேண்டும் என்பதே சீமானின் தந்திரமாக இருக்கிறது.. சிறுபான்மையினர் எப்போதுமே திமுகவுக்கு ஓட்டுப்போடுவதால், சீமானுக்கு ஆத்திரம்.. அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று இழிவாக பேசியிருக்கிறார் என்ற விமர்சனங்கள் வெடித்து கிளம்பி உள்ளன. மற்றொருபுறம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இஸ்லாமிய சமூகத்திடமிருந்து எழுந்து வருகின்றன.
இதனிடையே, சீமான் மீது போலீஸில் புகார் கொடுக்கவும் பலர் முனைப்பு காட்டி வருகிறார்கள்.. இந்திய தேசிய லீக் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் முகமது இதிரீஸ், செயலர் சித்திக் உள்ளிட்டோர். மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு தந்துள்ளனர்.
முஸ்லிம்கள்: அந்த மனுவில், "நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் எதிராக பேசிய காணொலி வைரலாகி வருகிறது. இது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சமூக ஒற்றுமையை சீர் குலைக்கும் விதத்தில் பேசியுள்ளார். அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏற்கனவே அருந்ததியர்களை வந்தேறிகள் என்று சொன்னதற்கு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழகமெங்கும் அச்சமூக மக்கள் போராட்டம் நடத்தி வருமநிலையில், அடுத்த பிரச்சனை சீமானுக்கு எதிராக வெடித்துள்ளது. இந்த நேரத்தில் நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தலின்போது, சீமான் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரச்சாரம்: பிரச்சாரத்தில் பேசும்போது, "ஒவ்வொரு கிறிஸ்தவர், இஸ்லாமியர் வீட்டுக்குள்ளேயும் போயி, எப்ப பார்த்தாலும், "சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும், சீமானுக்கு போட்றாதே, பிஜேபி வந்துடும்"-ன்னு ஒவ்வொரு முறையும் இவங்க சொல்லிட்டே இருக்காங்க.. பிஜேபிக்கு போடாதே என்று தைரியமாக சொல்ல முடியாத நீங்கள், சீமானுக்கு போட்டால் பிஜேபி வந்துடும் என்று சொல்வது எவ்வளவு பைத்தியக்காரத்தனம்? எனக்கு ஓட்டுப்போட்டால், நான்தானே வருவேன்?
என் வீட்டில் ஸ்விட்ச் போட்டால், என் வீட்டிலதானே விளக்கு எரியும்? உன் வீட்லயா எரியும்? ஒரு குடையை உங்களால கருப்பாக மோடிக்கு முன்னாடி பிடிக்க முடிந்ததா? எதிர்க்கட்சியாக இருந்தால் "கோ பேக்"? ஆளும் கட்சியாக இருந்தால் "வெல்கம்"??" என்று கேள்விகளை எழுப்பியிருந்தார்.
நோன்பு கஞ்சி: "நான் ஒருத்தன் உங்களுக்காக நிற்கிறேன்.. ஆனால் நீ என்னைய தவிர எல்லாருக்கும் ஓட்டுப்போடுறே.. நான் உங்களிடத்திலே சொல்லுகிறேன், "நான் இந்த நாட்டுக்கானவன், என் நாட்டு மக்களின் நலனுக்கானவன்".. எப்பவுமே என் மாமன், மைத்துனர் எல்லாம் என்னை நோன்பு கஞ்சிய குடிக்க கூப்பிடுவாங்க.. ஆனால், நான் போகமாட்டேன்.. வரமாட்டேன்னு சொல்லிடுவேன்..
"ஒருநாள் முஸ்லிம் வேலை"யை என்னால பார்க்க முடியாது.. அந்த வேஷத்தை என்னால போட முடியாது.. மச்சானை வீட்டுக்கு அனுப்பு சாப்பிட்டுக்கறேன்னு சொல்லிடுவேன்.. ஏன் என்றால், "நான் உன் உணவுக்கானவன் அல்ல.. உன் உணர்வுக்கானவன்.. உன் உரிமைக்கானவன்.. உன் உயிரானவன்"
திமுக ஓட்டு: நீ எனக்கு ஓட்டு போட்டால் போடு, இல்லாட்டி போ.. திமுகவுக்கே போட்டுக்கோ.. ஆனால், மறுமையில் இறைவன்கிட்ட நீ பதில் சொல்லிக்கோ..
ஒரு பெரியவர், தன் 5 வேளை கடமையை சரியாக செய்வார்.. இறைவனிடத்தில் தவறாமல் தொழுபவர்.. ஒருநாள் அதிகாலை, பள்ளிவாசலிலேயே படுத்து தூங்கியிருக்கிறார்.. அப்போது ஒருவர் வந்து "எழுந்திருங்க, தொழுகைக்கு நேரமாகுது, கிளம்பி போங்க என்று எழுப்புகிறார். அந்த பெரியர் அசதியால் மறுபடியும் 5 நிமிஷம் தூங்கிவிடுகிறார்..
ஆனால், அந்த நபரோ, பெரியவரை மறுபடியும் வந்து எழுப்பி, தொழுகைக்கு போக சொல்கிறார். பெரியவரும் எழுந்து போய் தொழுதுவிட்டு, திரும்பி வந்தால், அந்த நபர் அங்கேயே நின்றுகொண்டிருக்கிறார்.. அவரிடம் சென்ற பெரியவர், "நீ யார், என் கடமையை செய்வதற்கு, நீ கடமை தவறாமல் என்னை தட்டி எழுப்பிவிட்டாயே" என்று கேட்கிறார்.
சாத்தான்: அதற்கு அந்த நபர், "நான்தான் சாத்தான், பேய்.. நீ தூங்கி எழுந்து தாமதமாக போய் வருந்தி தொழும்போது, இறைவன் உனக்கு இரக்கம் காட்டிவிடக்கூடாது, உனக்கு அருள் பாலித்துவிடக்கூடாது. அதனால்தான் உன்னை சரியான நேரத்துக்கு எழுப்பி தொழுகைக்கு அனுப்பினேன்" என்கிறார்... அதாவது, அந்த சாத்தான்தான் இந்த தொகுதியில் இப்போது 2 கட்சியாக நின்று போட்டியிடுட்டு கொண்டிருக்கின்றன.
அந்த சாத்தான் அக்கறையில்தான் உன்னை எழுப்பிவிடுகிறது என்று நீ நினைக்கிறாய்.. இல்லவே இல்லை, உனக்கு நல்லது நடந்துடக்கூடாது அதனால்தான் எழுப்பியது என்று பிரச்சாரத்தில் பேசியிருந்தார்.
நேற்று சீமான் பேட்டியில், "நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே? என்று சொல்லிட்டே இருப்பாங்க" என்று நேற்று சீமான் சொல்லியிருந்த நிலையில், இந்த பேச்சும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications