திடீரென நேரு தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் சீமான் என்ட்ரி-என்கவுண்ட்டர் ரவுடிகளுக்கு ஃபுல் சப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை வழக்கில் தொடர்பே இல்லாத ரவுடிகளான திண்டுக்கல் மோகன்ராம், திருச்சி சாமி ரவி ஆகியோரை போலீசார், என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்ல திட்டமிட்டுள்ளது ஏன்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: தம்பி ஆம்ஸ்ட்ராங் கொலையில் இவ்வளவு காலம் ஆகிவிட்டது.. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய தூண்டியது யார்? கொலைக்கு காரணம் என்ன? உண்மையான கொலையாளிகள் யார்? அது இன்னமும் தெரியவில்லை.

crime seeman ramajayam case

ஆம்ஸ்ட்ராங் கொலையில் 3 என்கவுண்ட்டர்கள்

ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் இந்த 3 பேரும் ஏன் சுட்டுக் கொல்லப்பட்டனர்? இவர்கள் 3 பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட காரணம் என்ன? அந்த குற்றத்தின் முதன்மை குற்றவாளிகளா இந்த 3 பேரும்? இவர்களுக்கும் இந்த குற்றத்துக்கும் என்ன தொடர்பு? இவர்கள்தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டியவர்களா? அல்லது பணம் கொடுத்து உதவியவர்களா? என்கிற எந்த ஒரு தகவலுமே வெளியே வரவில்லை.

ராமஜெயம் கொலை வழக்கு

அதேபோலவே அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கிலும் இவ்வளவு காலமும் எந்த ஒரு தகவலும் வரவில்லை. ஆனால் இதில் எந்த சம்பந்தமும் இல்லாத, திண்டுக்கம் மோகன்ராம், திருச்சி சாமி ரவியை ஆகியோரை சுட்டுக் கொல்ல ஒரு திட்டம் இருக்கிறது. இந்த 2 பேரையும் திடீரென என்கவுண்ட்டர் பட்டியலில் சேர்க்க வேண்டிய தேவை என்ன?

திண்டுக்கல் மோகன் ராம், திருச்சி சாமி ரவி

யாரையாவது ஒருத்தரை சுட்டுக் கொலை செய்துவிட்டு வழக்கை முடித்துவிட வேண்டும் என்பதா? குற்றவாளியை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி விசாரணை நடத்தவில்லை. குற்றம் உறுதி செய்யவில்லை. அவர்கள் ஒரு இடத்தில் இருக்கின்றனர்.. இவர்கள் ஒரு இடத்தில் இருக்கின்றனர். ஆனால் திடீரென இந்த குற்றவழக்கில் தொடர்புபடுத்துகின்றனர். ராமஜெயம் கொலை வழக்கில் திண்டுக்கல் மோகன்ராமையும் திருச்சி சாமி ரவியையும் கொலை செய்துவிட்டால் சரியாகிவிடும் என வழக்கை முடிக்க நினைப்பதா? இது எந்த மாதிரியான அணுகுமுறை? இது எந்த மாதிரியான சட்டம் ஒழுங்கு.

என்கவுண்ட்டருக்கு யார் போட்ட உத்தரவு?

திண்டுக்கல் மோகன்ராமையும் திருச்சி சாமி ரவியையும் யாருடைய உத்தரவுப்படி கண்டதும் சுட உத்தரவுப்பட்டியலில் சேர்த்துள்ளீர்கள்? இந்த 2 பேருக்கும் ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்பிருப்பதாக நீதிமன்றம் சொல்லி இருக்கிறதா? உத்தரவிட்டுள்ளதா? அல்லது இந்த வழக்கில் தண்டனையை பெற்று சிறையில் இருந்தனரா? ஏற்கனவே ஜெகன், துரை இந்த 2 பேரையும் சுட்டுக் கொலை செய்தது எதனால்? இந்த 2 பேரும் திருந்தி வாழும் போது, சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்பது எப்படி சரியாகும்?

ராமஜெயம் கொலை வழக்கை மூடிவிட திட்டம்?

இப்பொழுது நான் பேசவில்லை எனில் திண்டுக்கல் மோகன்ராமையும், திருச்சி சாமி ரவியையும் கொலை செய்திருப்பார்கள். அப்போது வரும் செய்திகளில் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்பிருக்கிறது என சொல்லிவிட்டு வழக்கை மூடிவிட்டு போய்விடுவர். அப்படியானால் ராமஜெயம் கொலையில் உண்மையான குற்றவாளி யார்? ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மையான குற்றவாளி யார்? கண்டுபிடிக்க முடியவில்லை எனில் கையை விரித்துவிட்டு போக வேண்டும். அதைவிட்டுவிட்டு தொடர்பே இல்லாத இருவரை சுட்டுக் கொலை செய்வது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் போலி என்கவுண்ட்டர்கள்தான் நடைபெறுகின்றன. இதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+