செருப்பை கழட்டி காட்டி.. சீமானுக்கு என்னாச்சு?.. தம்பிகள் என்ன நினைப்பார்கள்?
: சீமான் திமுகவை விமர்சித்து பேசியது பல தரப்பினரிடையே அதிர்ச்சியை தந்துள்ளது
சென்னை: சீமானுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.. திமுகவை சங்கி என்று விமர்சித்ததுடன், தன் காலில் அணிந்திருந்த கருப்பு, சிவப்பு நிறத்திலான செருப்பை திடீரென கழற்றி மேடையில் காட்டி பேசியுள்ளார்.. இதன் பரபரப்பு இப்போது வரை நீங்கவில்லை.
Recommended Video
சீமான் - தமிழ் திரைப்பட டைரக்டர்.. நடிகர்.. என்ற அடையாளத்துடன் தமிழக மக்களுக்கு வெகு சீக்கிரத்தில் நெருக்கமானார்.. பிறகு, சிபா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தலைமையேற்று நடத்தவும், தனித்துவம் வாய்ந்தவராகவும், பார்க்கப்பட்டார்.
தமிழக முதல்வர் ஆசையுடன் திளைத்து வருபவர்களில் சீமானும் ஒருவர் என்பதை மறுக்க முடியாவிட்டாலும், அவர் எடுத்து வைக்கும் அரசியலில் பெரிய அளவிலான பிழையை சுட்டிக் காட்டிவிட முடியாது..

சீமான்
தமிழ் இனம் என்று சொன்னாலே, அதில் சீமானின் பெயரை உச்சரிக்காமல் நாம் எளிதாக கடந்துபோய்விடவும் முடியாது. தமிழ்த் தேசியம் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்... தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்பதில் உறுதியாகவும் உள்ளார்.. தமிழின மீட்சியே தமது லட்சியம், தனித்தாயக தமிழீழத் தனியரசு அமைப்பது தான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்பதில் உடும்புப்பிடியாக இருக்கிறார்.. குறிப்பாக, மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை என்பதே சீமான் கட்சியின் விதையாக ஆழ விழுந்துள்ளது.

அதிர்ச்சி
தமிழ்இனம் என்ற மெல்லிய கோட்டை அழித்துவிட்டு வெளியே வந்தால், பரந்த அரசியல் தனக்காக காத்திருக்கிறது என்று தெரிந்தும், தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் இன்றுவரை இருக்கிறார் சீமான்... தேர்தல் அரசியலை ஆரம்பத்தில் வெறுத்தவர்தான் சீமான், இந்த தேர்தல் அரசியலில்தான் மக்கள் தொடர்ந்து ஏமாறுகிறார்கள் என்று நினைத்து தேர்தல் அரசியலை கையில் எடுத்தார். "நாங்கள் உங்கள் வாக்குக்கானவர்கள் அல்ல, அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கைக்கானவர்கள்" என்பதை சீமான் தவிர வேறு யாராலும் சொல்லிவிட முடியாதுதான்..

பிரச்சாரம்
அதேபோல, எந்த ஒரு தேர்தலையும் லேசில் விடுவதில்லை.. தனித்து இறங்கி ஒரு கை பார்த்துவிடுகிறார்... சீமானின் பிரச்சாரம் எப்போதுமே மிகப் பெரிய வீச்சை கொண்டிருக்கும்... இணையத்தில் ட்ரெண்ட்டாக இருப்பதும் சீமான் பேச்சுக்கள்தான். ஆளும்தரப்பு, எதிர் தரப்பு, என யாரையுமே இவர் விட்டு வைப்பதில்லை.. கொட்டும் மழை, அடிக்கும் வெயில் என எதையுமே பார்ப்பதும் இல்லை... பேச்சில் வீரியம், காரம் குறையாமல் அதேசமயம் நாக்கை பிடுங்கி கொள்வது போல கேள்விகள் கேட்டதுதான், சீமானை 3-வது இடத்துக்கு அரசியலில் கொண்டு வந்து உயர்த்தியது என்பதை மறுக்க முடியாது.

சந்தேகம்
ஆனால்.. இதெல்லாம் இப்போது சீமானிடம் உள்ளதா? தொடர்ந்து கடைப்பிடிக்கிறாரா? என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.. காரணம், சீமானின் சமீபகால அரசியல் யாருக்கும் பிடிபடவில்லை.. யாரை ஆதரிக்கிறார்? யாரை எதிர்க்கிறார்? யாருடன் சமரசம் செய்கிறார்? யார் கருத்தில் ஒத்து போகிறார்? என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது.. இதற்கு சாட்சி சீமானின் சமீபகால பேட்டிகளையே சொல்லலாம். இதோ ஓரிரு உதாரங்கள்:

கேடி ராகவன்
பாஜகவின் கேடி ராகவன் வீடியோ வெளியானபோது, மொத்த தமிழ்நாடும் அதிர்ந்து போயிருந்தது.. வெளிப்படையாக இதை பற்றி பேசவும் முடியாமல், கருத்து சொல்லவும் முடியாமல், ஒரு தேசிய கட்சியிலேயே இப்படி நடந்துள்ளதா? அதுவும் முக்கிய தலைவரே இப்படி கீழ்த்தரமான செயலில் இறங்கி உள்ளாரா? என்ற சந்தேகம் சாமான்யனுக்கும் அன்றைய தினம் எழுந்தது.. ஆனால் சீமானோ, "யாரும் செய்யாததையா கே.டி.ராகவன் செஞ்சுட்டாரு" என்ற ஆதரவு கருத்தை வெளிப்படுத்தியது யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே நடிகை விஜயலட்சுமி வீடியோ மேல் வீடியோ போட்டு சீமானை கேள்வி கேட்டு வரும் நிலையில், ராகவனுக்கு முட்டு கொடுத்தது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

கருத்து
அடுத்து ஜெய்பீம் விஷயத்திலும் சீமான் இப்படித்தான் பேட்டி தந்தார்.. "நான் படத்தை பார்த்தபோது எனக்கு அப்படி எதுவுமே தெரியவில்லை.. ஆனால், மற்றவர்கள் இதுகுறித்து பேசியபோதுதான் தெரிந்தது.. அக்னி கலசம் பாமகவின் குறியீடு என்பது உலகிற்கே தெரியும்.. அந்தோணிசாமி என்கிற பெயரை ஏன் மாற்ற வேண்டும்? அதேபோல வன்னியர் சங்கத்தின் அடையாளமாக இருக்கும் அந்த குறியீட்டை ஏன் காலண்டரில் பயன்படுத்த வேண்டும்?" என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டார்.

வன்னி அரசு
இதற்குதான் விசிகவின் வன்னி அரசு கோபப்பட்டார்.. "சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பது தான் #இந்துத்துவக்கட்டமைப்பு. சாதி மீறி திருமணம் செய்தால் படுகொலை செய்கிறது மநுவாதம். அதன் பெயரே #ஆணவப்படுகொலை.இந்த இந்துத்துவக்கருத்தியலே இந்தியா முழுக்க படுகொலை செய்யத்தூண்டுகிறது. இதுகூட தெரியாமல் உளறிக்கொண்டு இருக்கிறார்" என்று சீமானை டேக் செய்து ஒரு ட்வீட் போட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

சாட்டை துரைமுருகன்
அதேபோல, சாட்டை துரைமுருகன் அன்று திமுகவை அநாகரீகமாக மேடையில் விமர்சித்தபோது, பக்கத்திலேயே உட்கார்ந்திருந்த சீமான், அவரை எதுவுமே கேட்கவில்லை, கண்டிக்கவுமில்லை.. அதேபோல, கடந்த வாரம் யூடியூபர் மாரிதாஸ் கைதானபோது, மாரிதாசின் பேச்சுக்கும் தேவையில்லாமல் உள்ளே நுழைந்து சப்போர் செய்திருந்தார்.. நாம் தமிழர் கட்சியை பாஜகவின் பி டீம் என்று ஏற்கெனவே விமர்சிப்பவர்கள், மாரிதாஸ் விவகாரத்தில் சீமானின் கருத்தால் இன்னும் ஆவேசமானார்கள்.

மேல்முறையீடு
இப்போதும் அப்படியேதான் பேசியிருக்கிறார். அப்துல் ரவூப் என்கிற தமிழ் தேசிய தொண்டரின் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான், "மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்? இது தமிழக அரசுக்கு பெருத்த அவமானம். அப்படியென்றால் யார் சங்கிகள்? திமுக அரசுதான் உண்மையான சங்கி என்று ஆவேசமாக கூறினார்... அத்துடன் நில்லாமல், திமுகவை சங்கி என்று விமர்சித்த வேகத்தில் தன் காலில் அணிந்திருந்த கருப்பு, சிவப்பு நிறத்திலான செருப்பை திடீரென கழற்றி மேடையில் காண்பித்தார்... 'நான் ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியதை பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. என்னை வெறியனாக மாற்றிவிட வேண்டாம் என்று சீமான் சொன்னதை கேட்டு நாம் தமிழர் கட்சி தொண்டர்களே அதிர்ச்சி அடைந்தனர்.

என்ன ஆச்சு?
சமீப காலமாக அவர் தரும் பேட்டிகளை எல்லாம் பார்த்தால், நியாயம் அநியாயத்தையும் தாண்டி, சரி தவறு என்ற நியதியையும் தாண்டி, குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான கருத்தை மட்டுமே முன்வைப்பது என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் என்பது வெட்டவெளிச்சமாகிறது.. கருத்தை கருத்தியலாக அணுகாமல், விமர்சனத்தை விமர்சன ரீதியாக எதிர்கொள்ளாமல், ஒரு தலைவனுக்குரிய தகுதிகளை இழந்து சீமான் செயல்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெயர்
தனக்கென்று ஒரு பாதை வகுத்து கொண்டாலும், அதை சந்தர்ப்பவாதத்துக்கு சீமான் ஒருநாளும் பயன்படுத்தியது இல்லை என்ற ஒரு பெயர் உள்ளது.. அதேசமயம், "சீமான் நல்லாதான் பேசறாரு.. நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நல்லாதான் கேள்வி கேட்கிறாரு.. ஆனாலும் இவரை நம்பலாமா? நம்பப்படாதா?" என்ற சந்தேகமும் மக்களுக்கு உள்ளபோது, சீமானின் பேச்சுக்கள் அதிருப்தியையே பெற்று தந்துள்ளது..

போராட்டம்
மக்களுக்கும், மண்ணுக்கும், மரத்துக்கும், மலைக்கும் கூட போராடி கொண்டிருக்கும் சீமானின் விழுதுகள் இன்று ஏராளம் உண்டு.. அவ்வளவு ஏன்? கட்சி தலைவரை பெயர் சொல்லி அழைக்காமல், அண்ணன் என்றுதான் சீமானை அவரது தம்பிகள் பாசத்துடன் அழைக்கிறார்கள்.. அண்ணன் சொல்லிவிட்டார் என்பதற்காகவே, மக்கள் பிரச்சனைகள் ஒவ்வொன்றையும் தாமாக முன்வந்து எடுத்து செய்வதால்தான், நாம் தமிழர் கட்சியினர் மக்களிடம் நெருங்கியே இருக்கிறார்கள்..

வருத்தம்
மலையென நம்பிக் கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டிய சீமான், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தி வருவது வருந்தத்தக்கது.. "என் மக்களை நம்பி என் கருத்தியலை நான் விதைக்கிறேன்.. முளைத்தால் மரம்.. இல்லையேல் மண்ணுக்கு உரம்" என்று சொல்லி வந்த சீமானின் 10 வருட அரசியலை பதம் பார்த்துள்ளது என்பதை நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை..!
-
சொத்து கணக்கை காட்டுவாரா சங்கீதா விஜய்? தவெக தலைவர் மொத்த மதிப்பும் இவ்வளவா? திமுக மாஸ்டர் பிளான் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்












Click it and Unblock the Notifications