கனமழை வெள்ளம்.. சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதி மக்களுக்கு சீமான் நேரில் சென்று ஆறுதல்
சென்னை: கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை வில்லிவாக்கம், கொளத்தூர் பகுதி மக்களுக்கு சீமான் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்ததுடன் உதவிகளையும் வழங்கினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர் உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏரிகள், குளங்கள் நிரம்பி, உபரிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பாய்ந்தோடும் நிலையில், பல பகுதிகளில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

சென்னையில் நேற்று பிற்பகல் முதல் இடைவிடாது பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டு உள்ளது. இதனால் கல்வி நிலையங்கள் விடுமுறை விடப்பட்டு உள்ளது. சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. தியாகராய நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, கொளத்தூர், வில்லிவாக்கம், கொரட்டூர், துரைப்பாக்கம், தரமணி, தாம்பரம், திருமலைநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகிறது. இதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகளும் உதவிகள் செய்து வருகின்றன.

இந்நிலையில் கனமழையாலும், வெள்ளப்பெருக்கினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகர மக்களுக்கு துயர் துடைப்பு உதவிகள் வழங்குவதற்காக, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , இன்று 11-11-2021 காலை, வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சத்யா நகர், வள்ளியம்மை நகர் மற்றும் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனி ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.
முன்னதாக இரண்டு நாள் முன்பு செய்த கனமழையின் போது பேசிய சீமான், சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாம் தமிழர் தம்பிகள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் புரிய உடனடியாக களப்பணியாற்ற முன்வர வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications