டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்- வேளாண் குடிகள் மீது தொடுக்கப்படும் அரச பயங்கரவாதம்..ஆவேசப்படும் சீமான்
சென்னை: காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது என்பது வேளாண் குடிகள் மீது தொடுக்கப்படும் அரச பயங்கரவாதம் என கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் புதிதாக நிலக்கரி ஆய்வு செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டிருப்பது வேளாண் குடிகள் மீது தொடுக்கப்படும் அரச பயங்கரவாதமாகும். குறிப்பாகப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தஞ்சாவூர் மாவட்டம் அறிவிக்கப்பட்டப் பின்னரும் இந்த அவல நிலை தொடர்வது ஒன்றிய அரசின் தமிழர் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.

மன்னார்குடிக்கு அருகே இருக்கக்கூடிய நிலக்கரி வளங்களை ஆய்வு செய்யும் வகையில் அருகே உள்ள பகுதிக்குட்பட்ட கிராமங்களான வடசேரி, மகாதேவப்பட்டினம், கீழ்குறிச்சி ஆகிய இடங்களின் வேளாண் நிலங்களில் குழாய் அமைத்துத் துளையிடும் பணிகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன.
மேற்சொன்ன கிராமங்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவதாலும், தஞ்சாவூர் மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசினால் அறிவிக்கப்பட்டதாலும், வேளாண்மையை பாதிக்கும் இந்த ஆய்வுத் திட்டத்தினை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தின் அட்டவணை 2-ல் தடை செய்யப்பட்டத் திட்டங்களில் "இதர ஹைட்ரோகார்பன்" என்றிருக்கும் இடத்தில் நிலக்கரியும் அடங்கும் என்பதை உறுதிபட எடுத்துரைத்து இத்திட்டம் நடைபெறுவதனை தமிழ்நாடு அரசுத் தடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், ஒன்றிய அரசு இத்திட்டத்தினை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும். தமிழ்நாடு அரசு ஆறுதல் காரணங்களைக் கூறிக் கொண்டிருக்காமல் ஒன்றிய அரசினை நேரடியாக இத்திட்டத்தில் எதிர்க்க வேண்டும். மீறி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டால் என் தலைமையில் நாம் தமிழர் கட்சிப் பெரும் அளவிலான எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தும் என்றும், எவ்வகையிலும் இத்திட்டம் நடைபெறாமல் தடுப்போம் என்றும் எச்சரிக்கிறேன். இவ்வாரு சீமான் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications