நாம் தமிழர் கட்சியில் எனக்கு எதிராக சதி- சீமான் முன்னிலையில் கட்டுச் சோற்றை கவிழ்த்த மனைவி கயல்விழி!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் தம்மை எதிரியாக சிலர் பேசி பிரச்சனை வந்தது என நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்விழி சீமான் வெளிப்படையாக தெரிவித்தார்.
சென்னையில் மூத்த வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் படத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சீமான் மனைவி கயல்விழி சீமான் பேசியதாவது: என்னை சீமான் முதன் முதலாக சந்தித்த பின் எல்லோரு அப்பா, அம்மாகிட்ட சொல்லுவங்க.. ஆனால் தடா சந்திரசேகரிடம்தான் சொன்னார். அதன்பின்னர் தடா சந்திரசேகரன் என்னை மறைமுகமாக பொண்ணு பார்த்தார். எனக்கே தெரியாது. அப்ப இருந்து எனக்கு ரொம்ப நெருக்கமா இருந்தார். எங்க திருமணம் நடக்கனும்னு என்பதில் ரொம்ப உறுதியாக இருந்தார்.

சீமானுடனான தொடக்க கால சண்டை: எங்களுக்குள் (எனக்கும் சீமானுக்கும்) ஆரம்ப காலத்துல சில பிரச்சனைகள், சின்ன சின்ன சண்டைகள் வரும்போது எங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு வெச்சு பேசும் போது, சீமானிடம். "தம்பி.. இப்ப வேற... இது குடும்பமாகிருச்சு.. இதை எல்லாம் மாத்திகிடனும்னு" நிறைய சொல்வார். ஆனால் எங்கிட்ட எப்பவும் சொல்ற வார்த்தை "தம்பி நல்லவன்மா! அவன் சரியா பண்ணுவான்மா.. என் தம்பி நல்லவன்மா" .. இந்த வார்த்தையை மாமா இப்ப வரைக்கும் என்கிட்ட சொல்லி இருக்கிறார்.
நாம் தமிழர் கட்சிக்குள் என்னை வைத்து பிரச்சனை: சமீப காலத்துல சில பிரச்சனைகள் வரும் போது... நம்ம கட்சிக்குள்ளேயே சிலர் என்னை எதிரியாக பேசி பிரச்சனைகள் வரும்போது, அப்ப தடா சந்திரசேகரன் என்கிட்ட நேரில் பேசலை.. ஆனால் எனக்கு தெரியும்,, அவரு ஆறுதலாக இருப்பார் என.. அன்றைக்கு தடா சந்திரசேகர் மனைவி சொல்லி அழுதுகிட்டு இருந்தாங்க.. மருமகளுக்கு நான் எப்பவும் இருப்பேன் என தடா சந்திரசேகர் சொல்லி இருக்கிறார்.. அந்த சமயத்தில் என்கிட்ட ஒருதடவை அலைபேசியில் பேசினாரு...அப்ப தெரிஞ்சது.. தடா சந்திரசேகரன் என் பக்கம் இருக்கிறார் என்பது. அப்பவும் என் கிட்ட கடைசியாக சொன்ன வார்த்தை "தம்பி ரொம்ப நல்லவன்மா... அவன் எல்லாத்தையும் சரியா பண்ணுவான் என்பதுதான். ஆரம்பத்தில்தான் தடா சந்திரசேகரனிடம் பிரச்சனைகளை சொன்னேன். அதன்பின்னர் நானே "அவரு நல்லவரு.. சரியா பண்ணுவாரு" என சொல்லிக் கொள்வேன். இந்த குடும்பம் நீங்க உருவாக்கிக் கொடுத்தது.. நன்றி. இவ்வாறு கயல்விழி சீமான் பேசினார்.












Click it and Unblock the Notifications