சீமான் கைது இல்லை.. 1.15 மணி நேரமாக நடைபெற்ற கிடிக்கிபிடி விசாரணை நிறைவு
சென்னை: பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜரான நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு சீமான் கைதாகலாம் என முதலில் சொல்லப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை.
நடிகை அளித்த பாலியல் புகாரில் வழக்குப்பதிவு செய்து சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகச் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இருப்பினும், சீமான் வெளியூரில் இருந்ததால் அவர் பங்கேற்கவில்லை. இது தொடர்பாக போலீசாரிடம் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்தனர். தொடர்ந்து இரவு 8 மணியளவில் சீமான் விசாரணைக்கு ஆஜராகக் கிளம்பினார். இருப்பினும், போலீசார் அவரை 9.15 மணிக்கு வருமாறு கூறினர்.
9 மணியளவில் சீமான் விசாரணைக்கு ஆஜராக சென்ற போது போலீஸ் நிலையத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நீண்ட தாமத்திற்குப் பிறகு இரவு 10 மணிக்குத் தான் சீமான் போலீஸ் நிலையம் சென்றார். உள்ளே அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மொத்தம் 53 கேள்விகளைக் கேட்டு அதற்கு எழுத்துப்பூர்வ பதில்களைப் பெற போலீசார் முடிவு செய்துள்ளனர்.
விசாரணைக்குப் பிறகு சீமான் கைதாகலாம் என முதலில் சொல்லப்பட்டது. இருப்பினும், விசாரணையின் போதே சீமான் கைதாக வாய்ப்பில்லை என போலீஸ் வட்டாரங்கள் சார்பில் கூறப்பட்டது. அதற்கேற்ப சுமார் ஒரு மணி நேரம் சீமானிடம் நடந்த விசாரணை நிறைவடைந்தது. அவர் சற்று நேரத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்து கிளம்புவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications