நடிகையுடன் உடலுறவு, மாதம் ரூ.50,000.. அனைத்தும் உண்மை..சீமான் கைதுக்கு காரணமாகும் வாக்குமூலம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை விரும்பி பணத்துக்காக தம்முடன் வந்தார்; நடிகைக்கு மாதம் ரூ.50,000 பணம் கொடுத்தேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுத்தடுத்து செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கும் கருத்துகளே அவரது கைதுக்கு காரணமான ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கப் போகிறது என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி , நடிகை பலாத்கார வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் உச்சகட்டமாக சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் தரப்போ, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.மேலும் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட போலீஸ் சம்மனை கிழித்து எறிந்து புதிய பிரச்சனையையும் கிளப்பிவிட்டது.

Seeman Vijayalakshmi NTK

இந்த நிலையில் சீமான் இன்று சேலம், கோவை உள்ளிட்ட இடங்களில் செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகையுடனான உறவையும் மாதம் ரூ.50,000 பணம் தந்ததையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதுவும், தாம் ஒன்றும் நடிகையை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்யவில்லை; அப்படி பலாத்காரம் செய்திருந்தால் மட்டுமே குற்றம்; நடிகை விரும்பியே பணத்துக்காக தம்முடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார்; அது எப்படி பலாத்காரத்தில் சேரும் என்கிறார் சீமான். அத்துடன் நடிகைக்கு சில மாதங்கள் ரூ.50,000 கொடுத்தனர் என் தம்பிகள் என்றும் சீமான் கூறினார்.

இதே சீமான் முன்னர், அந்த நடிகை யார் என்றே தெரியாது; திமுகதான் அவரை இறக்கிவிடுகிறது என விமர்சித்தார். ஆனால் 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்திலேயே நடிகையின் புகார் வெளிப்படையாக சொல்லப்பட்டதுதான். விஜயலட்சுமி விவகாரம் சீமானுக்கு அதி உச்சநெருக்கடியை தந்துவிட்ட நிலையில் வேறுவழியே இல்லாமல் இப்போது நடிகையுடனான உடலுறவு விவகாரத்தை நியாயப்படுத்தி பேசுகிறார் . சீமான் ஆவேசமாக பேசுவதாக நினைத்து தரும் பேட்டிகளே அவர் கைது செய்யப்படுவதற்கு காரணமான ஒப்புதல் வாக்குமூலமாக இருக்கப் போகிறது என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+