படம் எடுக்க போய் பிரபாகரனுடன் பேசியது 10 நிமிடம்தான்.. ஒரே மேடையில் சீமானை சீண்டிய காளியம்மாள்!
சென்னை: இலங்கைக்கு திரைப்பட இயக்குநராக சினிமா படம் எடுக்கப் போய் பிரபாகரனுடன் வெறும் 10 நிமிடம்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார் என்று அக்கட்சியின் மேடையிலேயே அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அதே மேடையிலேயே சீமான் பதிலும் தந்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் பேசியதாவது: உண்மையிலேயே சீமான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். ஒருவேளை படம் எடுக்க இலங்கைக்குப் போய் ஷூட்டிங் மட்டும் எடுத்துவிட்டு திரும்பி வந்திருந்தால் இத்தனை பேருக்கான ஒரு தமிழ்த் தேசியத் தலைவராக சீமான் நமக்குள் புகுத்தப்பட்டிருக்கமாட்டார். அங்கே போய் 10 நிமிட பேச்சு (பிரபாகரனுடன்).. இவ்வளவு பெரிய மாற்றத்துக்கு காரணமாக, அவரது அரசியலை நிலை பெறச் செய்யக் கூடிய மையப்புள்ளியாக இருந்தது.

காளியம்மாள் பேச்சுக்கு சீமான் பதிலடி: இங்கே பேசிய என் தங்கை கூட சொன்னாங்க (காளியம்மாள்).. நான் படம் எடுக்கப் போனதாகவே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். படம் எடுக்கப் போனவர்கள் வேற.. படம் எடுக்கிற குழுவினரை பயன்படுத்திக் கொண்டு என்னை அழைத்துக் கொண்டு போனது வேற.. படம் அவர்கள் எடுத்தார்கள்.. அந்த விழாவை திரைப்பட இயக்குநர் என்ற முறையில் நான் தொடங்கி வைத்தேன்.. படம் நான் எடுக்கவில்லை. மற்றவர்கள் எல்லாம் நான் 8 நிமிடம் (பிரபாகரனுடன்) பேசியதாக சொல்லுகிறார்கள்.. தங்கை (காளியம்மாள்) கூடுதலாக 2 நிமிடம் சேர்த்து 10 நிமிடம் என்கிறார். என்ன நடந்தது என்பது எனக்கும் என் தலைவனுக்கும் தெரியும்... இங்கே இருக்கிற பல போராளிகளுக்கும் தெரியும். அவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் எல்லோரும் ஆளுக்கு ஒன்றை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். 10 நிமிடம் (பிரபாகரனுடன்) பேசியவனிடம்தான் நம்பி ஒப்படைக்கிறோம். அவனை நம்பி விட்டுட்டுப் போகிறோம் என சொல்வார்களா (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இறுதி நாட்களில்) ? என கேள்வி எழுப்பினார் சீமான்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications