அடடே சூப்பர்..சர்ச்சைக்கிடையே சீமானுக்கு வந்த ஹாப்பி நியூஸ்! போட்டுத் தாக்கும் நாம் தமிழர் தம்பிகள்!
சென்னை: கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்கு சதவீதத்தை பெற்றதை அடுத்து, சீமானின் நாம் தமிழர் கட்சியை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். இதற்கான அறிவிப்பை கடிதம் வாயிலாக இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டு தேர்தலை சந்தித்த பிரதான அரசியல் கட்சிகளில் இதுவரை கூட்டணி அமைத்துப் போட்டியிடாத கட்சி என்றால் நாம் தமிழர் கட்சி மட்டும் தான். திமுக - அதிமுக மட்டுமே தங்களுக்குள் கூட்டணி அமைக்காமல், அனைத்து பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளன.

இதற்கு தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அப்படி தமிழக இளைஞர்களிடையே மாற்று சக்தி என்ற மாபெரும் முழக்கத்தோடு வந்த நாம் தமிழர் கட்சிக்கும் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
சீமான்:
திரைத்துறையிலிருந்து ஈழத் தமிழ் விவகாரம், தமிழ் தேசியம் போன்ற முழக்கங்களோடு அரசியலில் குறித்த சீமானுக்கு மெல்ல மெல்ல இளைஞர்களிடையே ஆதரவு பெருகியது. திராவிட கட்சி கொள்கைகளில் வேறுபாடு கொண்டவர்கள் சீமானின் பின்னால் அணி திரள தொடங்கினர். ஆரம்பத்தில் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்து வந்த சீமான் இடையே பாஜக அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்திருக்கிறார்.

நிர்வாகிகள் கலக்கம்:
அதே நேரத்தில் ஆண்டு சீமானின் பேச்சுகளில் மாற்றம் நிகழத் தொடங்கியது, தேர்தல் அரசியலில் சீமானுக்கு பின்னால் அணி திரள தொடங்கியவர்களில் பல முக்கிய நிர்வாகிகள் தற்போது தனியே சென்று விட்டனர். காரணம், ஏற்கனவே சொன்னது போல ஆண்டுகாண்டு சீமானின் செயல்பாடுகளிலும் பேச்சுகளிலும் ஏற்பட்ட மாற்றம் தான். ஆரம்பத்தில் பெரியாரை உயர்த்தி பிடித்த சீமான் பின்னர் அவரை தரம் தாழ்ந்து பேசத் தொடங்கினார்.
அடுத்தடுத்து சர்ச்சை:
அது மட்டும் அல்லாமல் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒருமையில் சீமான் பேசியது அவர் கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பை தந்தது. இந்த நிலையில் தந்தை பெரியார் குறித்து சீமான் மோசமாக விமர்சித்த நிலையில் அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம்:
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று டெல்லியில் இருந்து கிடைத்து இருக்கிறது. நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றதை அடுத்து அந்த அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இதற்கான கடிதமும் அந்த கட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
நாம் தமிழர் சின்னம்:
அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சி கேட்டிருந்த விவசாய நிலத்தில் உழவு செய்யும் விவசாயி, புலி சின்னங்களை தர முடியாது எனவும், தேர்தல் ஆணைய வெப்சைட்டில் உள்ள ஏதாவது ஒரு சின்னத்தை தேர்ந்தெடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் நாம் தமிழர் தம்பிகள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதே நேரத்தில் நாம் தமிழர் கேட்ட சின்னங்களை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்து விட்டதால், வேறு சின்னத்தை தேர்ந்தெடுக்க திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications