பறிபோகும் தமிழக லோக்சபா தொகுதிகள்- அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கும் சீமான்- காரணம் என்ன?
சென்னை: தொகுதிகள் மறுசீரமைப்பின் அடிப்படையில் தமிழ்நாடு லோக்சபா தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படுவது தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி பங்கேற்காது என அதன் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்
இது தொடர்பாக சீமான் கூறியதாவது: மக்கள் தொகையில் தொகுதிகள் பிரிப்பு என்பது எப்போது வந்தது? எப்போ வந்தது என சொல்லுங்கள்? அப்பொழுது எதிர்க்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?

2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதே போல செய்தியாளர்கள் சந்திப்பில் நான் எதிர்த்து பேசியிருக்கிறேன். அப்ப திமுக என்ன செய்தது? இப்ப பேச வேண்டிய தேவை என்ன வந்தது? ஏன் எனில் இப்பொழுது தேர்தல் வருகிறது.. அதை தொடங்கும்போதே எதிர்க்க வேண்டியதுதானே..
அரசு முன்னெடுக்கிற இந்த கட்சிகள், கூட்டத்தில் பேசுவது எல்லாம் நம்பி நம்பி ஏமாந்த இனத்தின் பிள்ளை. அதனால் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் தனித்துதான் போராடுவோம்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கமாட்டோம். பல போராட்டங்களை தனித்துதான் நடத்தி இருக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
அனைத்து கட்சிக் கூட்டமும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பும்
தமிழ்நாடு லோக்சபா தொகுதிகள் பறிபோவது தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மார்ச் 5-ந் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க 45 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில், மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பை இரண்டு விதமான முறைகள் மூலம் மேற்கொள்ள கருதப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் முறையின் கீழ், ஏற்கெனவே உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின்படி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டியிருக்கும்.
இரண்டாவது முறையின்படி, மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 848 ஆக உயர்த்தி, தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால், நமக்குக் கூடுதலாக கிடைக்க வேண்டிய 22 தொகுதிகளுக்குப் பதிலாக, 10 தொகுதிகள் மட்டுமே கிடைத்து, 12 தொகுதிகளை நாம் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். எனவே, எவ்வகையில் பார்த்தாலும், தமிழ்நாட்டுக்குப் பேரிழப்பு ஏற்படும் வாய்ப்பே நம் முன்நிற்கிறது.
தற்போதைய மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கையின் அடிப்படையில்கூட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை, தமிழ்நாடு பெற இயலவில்லை. ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு, ஒன்றிய அரசு சார்ந்த திட்டங்களில் நிதி குறைக்கப்படுவது அல்லது விடுவிக்கப்படாமல் தடுப்பது, ஒன்றிய அரசு அதிகாரத்தில் நமது பிரதிநிதித்துவம் குறைந்து வருவது, நிதிப்பகிர்வில் காட்டப்படும் பாரபட்சம் என அனைத்து வகைகளிலும், தமிழ்நாட்டின் உரிமைகளும், சுயாட்சியும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், நமது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறைக்கப்பட்டால், தமிழ்நாட்டின் குரல்வளை முழுமையாக நசுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications