வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சிலைகள் கொண்டு வரப்படும்.. அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டம்
சென்னை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவை முதல்வரின் கட்டுப்பாட்டில் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் உள்ள கடத்தப்பட்ட சிலைகள் உள்துறை அமைச்சகம் மூலமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மலை கோவில்களில் ரோப் கார் அமைக்கும் பணி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில், அமைச்சர் சேகர்பாபு தலைமையில், துறை ரீதியான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், பழனி உட்பட5 திருக்கோயில்களை, மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும், சமீபத்தில் பெய்த மழையால் பல கோயிலில் தண்ணீர் தேங்கியிருந்த நீரை அகற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

அறங்காவலர்கள்
மேலும் 80-க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் அறங்காவலர்கள் நியமிப்பது குறித்தும் ஆலோசனை நடத்தபட்டதாக கூறிய அவர், பழனியில் கூடுதல் ரோப் கார்க்கான பணிகள் தடைபட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.

கோயில்கள்
இந்நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மலை கோவில்களில் ரோப் கார் அமைக்கும் பணியை அரசு மேற்கொள்ளும் என்றும், தமிழகத்தில் உள்ள கோவில்களின் அனைத்து குளங்களும் தூர்வாரும் பணி நடத்தப்படும் என கூறிய அமைச்சர், அதில் 40 குளங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் அந்த 40 குளங்களும் சீர் செய்யப்படும் எனக் கூறினார்.

முதல்வரின் கட்டுப்பாடு
அதுமட்டுமின்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவை முதல்வரின் கட்டுப்பாட்டில் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் உள்ள சிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. உள்துறை மூலமாக அதை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியும், சிலைகள் கடத்தப்படுவதை தடுக்க 2018-19ல் ஸ்டிராங் ரூம் அமைக்க திட்டமிடப்பட்டது, ஆனால் கடந்த ஆட்சியில் அமைக்கவில்லை.

ஸ்டிராங் ரூம்
எனவே திமுக ஆட்சியில் தற்போது ஒரு ஸ்டிராங் ரூம் அமைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் தமிழகம் முழுவதும் ஸ்டிராங் ரூம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். எனவே ஜனவரி மாதத்திற்குள் வடபழனி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை












Click it and Unblock the Notifications