சனி, ஞாயிறு லீவு.. எலெக்சன் ரிசல்ட் வேற.. டாஸ்மாக்கில் வேறலெவல் கலெக்சன்... சென்னைதான் டாப்
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் மதுபானங்களை அங்கே அமர்ந்து பருகும் வசதி உள்ள அனைத்து பார்களும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுபானக்கடைகள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மது விற்பனை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

குவிந்த வசூல்
கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூட வேண்டும் என்று அண்மையில் அரசு உத்தரவிட்டது.
அதன்படி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிறு) மதுக்கடைகள் மூடப்படுகின்றன. 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால், நேற்று மதுக்கடைகளில் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அலைமோதியது.

தேர்தல் முடிவுக்காக கட்சியினர்
மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை பெட்டி பெட்டியாக பலர் வாங்கி சென்றனர். நாளை தேர்தல் முடிவு வெளியாக இருப்பதால் அரசியல் கட்சி தொண்டர்கள், அதனை கொண்டாடும் வகையில் மதுபானங்களை அதிக அளவில் வாங்கி குவித்தனர்.

ஒரே நாளில் ரூ.292 கோடி
இதனால் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் நேற்று டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட மது விற்பனை அதிகரித்தது. வழக்கமாக தினமும் ரூ.120 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை ஆகி இருந்தது.

திருச்சி 2ம் இடம்
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிகபட்சமாக ரூ.63.44 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளதாம். அதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் ரூ.56.72 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.55.93 கோடி யும், மதுரை மண்டலத்தில் ரூ.59.63 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.56.37 கோடியும் மது விற்பனை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications