சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பள்ளிகளின் அருகில் புகையிலை பொருட்கள் விற்பனையா.? போலீஸிடம் புகாரளிக்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிகள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் பற்றிய தகவல்களை, போலீசிற்கு தெரிவிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு சாக்லெட், சிப்ஸ் போன்ற வகைகளுடன் சிகரெட்டுகளை விற்பனை செய்யும் கும்பல்கள் பள்ளிகளின் அருகில் தென்பட்டால், உடனடியாக தவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

Selling tobacco products near schools.? Order the headmistress report to police

அதில் பள்ளி மாணவர்களை புகையிலை விற்கும் கும்பல்களிடமிருந்து காக்க, தலைமையாசிரியர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களை தீய பாதைகளுக்கு அழைத்து செல்லும் கும்பல் பற்றி, காவல் நிலையத்துக்கு உரிய தகவல்களை அளிக்க வேண்டும்.

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார் திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்

இதன் மூலம் புகையிலை விற்பவர்களின் பிடியில் இருந்து பள்ளி மாணவர்களை காக்க முடியும். இவ்விவகாரத்தில் தலைமை ஆசிரியர்களின் நடவடிக்கைகளே பிரதானமாகும் எனவும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் கூறியுள்ளது.

எனவே தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக உரிய அறிவுறுத்தலை வழங்குமாறு, மாவட்ட முதன்மை பள்ளி கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

English summary
For information about merchants who sell tobacco products near schools, head masters should inform to police has been ordered by the Directorate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X