பொருளாதாரத்தை மோடியும் மண்ணின் மகள் நிர்மலாவும் பார்த்துக் கொள்வார்கள்.. செல்லூர் ராஜூ கூல் பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் பொருளாதாரத்தை பிரதமர் மோடியும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பார்த்துக் கொள்வார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா செல்போன்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் 3000 பேருக்கு கைப்பேசி வழங்க உள்ள நிலையில் முதல் கட்டமாக இன்று 1664 பேருக்கு தொடுதிரை கைப்பேசி வழங்கப்பட்டது.

ஏற்றத்தாழ்வு

ஏற்றத்தாழ்வு

இதையடுத்து செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்தியாவின் பொருளாதாரம் உலகளாவிய பொருளாதாரமாக உள்ளது. அதில் ஏற்றத்தாழ்வு வரத்தான் செய்யும்.

சிறப்பாக

சிறப்பாக

அப்படியிருக்கும்போது ஒரு சில திட்டங்கள் பாதிக்கத்தான் செய்யும். பொருளாதார வீழ்ச்சியில் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் பிரதமர் மோடியும் மண்ணின் மகள் நிர்மலா சீதாராமனும் நிதி மேலாண்மையை மிகவும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இதனால் பாதிப்பு தாக்கம் அதிகளவில் வராது. லேசான சரிவு என்பதெல்லாம் வழக்கமான ஒன்றுதான். எனவே பொருளாதாரத்தை அவர்கள் இருவரும் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

கவுண்டமணி காமெடி

கவுண்டமணி காமெடி

செல்லூர் ராஜூ எதை சொன்னாலும் அதை டிரோல் செய்வது நெட்டிசன்களின் வேலையாகும். அந்த வகையில் கவுண்டமணி படத்தில் வரும் காமெடி காட்சியுடன் ஒப்பிட்டு கலாய்க்கின்றனர். அந்த படத்தில் நடிகை ஷாம்லியின் கணவனாக வரும் பயில்வான் ரங்கநாதன் எல்லாத்தையும் மேல இருக்கிறவன் பாத்துப்பான்... என்பார். அதற்கு கவுண்டமணியோ அதென்ன எல்லாத்தையும் மேல இருக்கிறவனே பார்த்துக்கணும், கீழே இருக்கிறவனுக்கும் கொஞ்சம் மிச்ச வைடா... என்பார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+