Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதுல பாருங்க! எடப்பாடி கூட்டத்தில் தவெக கொடியுடன் வந்தது யார் தெரியுமா? செல்லூர் ராஜு சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பிரச்சார கூட்டத்தில் தவெக கட்சி கொடியுடன் பங்கேற்றது யார் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புதிய தகவலை தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் 54 ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை கே.கே.நகரில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

sellur raju edappadi palanisamy tvk

இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மதுரை மாநகராட்சியில் வரலாறு காணாத அளவிற்கு திமுக உறுப்பினர்கள் வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் உத்தரவின் பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

மண்டல தலைவர் ராஜினாமா விவகாரத்தை முடிக்க திமுக அரசு திட்டமிட்டது. ஆனால், அதிமுக கொடுத்த அழுத்தத்தின் காரணமாக மேயர் ராஜினாமா செய்துள்ளார். சொத்து வரி முறைகேட்டில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

வாரிசு அரசியல், ஊழலை ஒழிப்பதற்காக எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள இளைஞர்கள் அவர்களாகவே எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது பங்கேற்கிறார்கள்.

மதுரை அழகுடன் காணப்படுகிறது என்றால் அதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காரணம். அதிமுக ஆட்சியில் மதுரைக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளனர். திமுக ஆட்சியில் உள்ள நான்கே முக்கால் வருடங்களில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தவில்லை.

மதுரையில் உள்ள 2 அமைச்சர்கள் எந்தவொரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை. திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை, மதுரை மக்கள் சொல்லக் கூடிய குறைகளை, கருத்துக்களை சட்டசபையில் பேசுகிறேன்.

அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரக்கூடிய சூழல் உள்ளது. தேர்தல் காலகட்டத்தில் தான் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும் என கூறினார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, புதிய கூட்டணிக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது. அங்கே பாருங்கள் உயரமான கொடி என தவெக கொடி பறந்ததை காட்டினார்.

இதனால் அதிமுக- தவெக கூட்டணி இறுதியாக போவதாக சொல்லப்பட்டது. ஆனால் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் கரூர் விவகாரத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் யாருடன் கூட்டணி பேசியிருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுந்தது.

இந்த நிலையில் அதிமுக கூட்டத்தில் தவெக கொடி பிடித்திருந்த இளைஞர் அதிமுக சின்னம் பொரித்த டீசர்ட்டை அணிந்திருந்ததால் சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து முன்னர் ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜுவிடம் கேட்டதற்கு அவர் அதிமுக கொடியையே அதிமுகக்காரர்கள் பிடிக்க மாட்டார்கள். இதில் தவெக கொடியை எங்கிருந்து... என கேள்வி எழுப்பியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+