ரஜினிக்கு 2 படங்கள் வர போகுது.. அவர் பரபரப்பாக பேசுவது வழக்கம்தானே.. செல்லூர் ராஜூ
சென்னை: ரஜினிகாந்துக்கு 2 படங்கள் வரபோகிறது. அதனால் அவர் பரபரப்பாக பேசுவது வழக்கம்தானே என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் சிகரம் கே பாலசந்தரின் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

அப்போது அதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முயற்சிப்பது போல் எனக்கு பூச முயற்சி நடக்கிறது. இந்த முயற்சியில் திருவள்ளுவரும் சிக்கமாட்டார். நானும் சிக்க மாட்டேன் என ரஜினி கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து தனது போயஸ் தோட்ட இல்லத்துக்கு சென்ற அவர் அங்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறுகையில் நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன்.நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன்.
ஆளுமைமிக்க, சரியான தலைமைக்கு தற்போதும் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறிய கருத்து குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர் கூறுகையில் தமிழகத்தில் வெற்றிடம் இல்லை. ரஜினிகாந்த் படம் வெளியாகும் போதெல்லாம் ஏதாவது பரபரப்புக்கு இப்படி பேசுவது வழக்கம்தான். அது போல் தற்போது தர்பார் உள்ளிட்ட இரு படங்கள் வெளியாவதால் அவர் பரபரப்புக்காக அப்படி பேசியிருப்பார் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications