ஸ்டாலின் தான் காரணம்..நான் அப்படி பேசவில்லை! மீடியா தான் மாத்திட்டாங்க.. செல்வப் பெருந்தகை விளக்கம்
சென்னை: இன்னும் எத்தனை நாட்கள் தான் பிறரை சார்ந்திருப்பது? காங்கிரஸ் கட்சிக்கென்று வரலாறு இருக்கிறது என காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் செல்வபெருந்தகை பேசிய நிலையில், ஆசை இருக்கலாம் பேராசை கூடாது என முன்னாள் தலைவரான ஈவிகேஸ் இளங்கோவன் கூறியது சர்ச்சையானது. திமுகவை செல்வப்பெருந்தகை சீண்டியதாக சர்ச்சை எழுந்த நிலையில், தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவரே விளக்கம் அளித்துள்ளார்.
காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மாவட்ட தலைவர்கள் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய செல்வப் பெருந்தகை," தமிழகத்தில் எத்தனை நாள் நாம் பிறரை சார்ந்து இருக்க போகிறோம்? சுயமாக வளர வேண்டாமா? மற்ற கட்சிகளை சாராத நிலை இருக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் தொண்டர்கள் தான் பதில் சொல்ல வேண்டும் என கூறியிருந்தார்.
காங்கிரஸ் பொதுக் குழு: இதற்கு பதிலளித்த முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும் தற்போதைய ஈரோடு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன்," இன்றைக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திராவிட முன்னேற்றக் கழகமும் திமுக தலைவர் மு க ஸ்டாலினும் தான் என்பதை மறந்து விடக்கூடாது என பேசியிருந்தார். இந்த சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், திமுகவால் தான் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பதை மறந்துவிடக் கூடாது என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கூட்டத்தில் நடந்த பேச்சை ஊடகங்கள் திரித்து வெளியிட்டுள்ளதாக செல்வப் பெருந்தகை விளக்கமளித்துள்ளார்.
செல்வப் பெருந்தகை: இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி புதுச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை கொண்டாடுகிற வகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், வெற்றிக்காக பாடுபட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலிமைப்படுத்துவது என்பது குறித்தும் விவாதிப்பதற்காக நேற்று 11.6.2024 அன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
ஸ்டாலினுக்கு நன்றி: தொடக்கத்தில் ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிற முதல் தீர்மானத்தில், 'கடந்த மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்கு தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இப்பொதுக்குழு கூட்டம் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறது" என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம், தமிழகத்தில் மகத்தான வெற்றி பெறுவதற்கு தி.மு. கழக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது பங்களிப்பை தீர்மானத்தின் மூலம் உறுதிபடுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சி: இதைத் தொடர்ந்து நான் பேசும் போது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அதை அடைவதற்கு இலக்கும் இருக்கிறது. அதைப் போல, காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதற்கு நமக்கு கிடைத்த கருத்தியல் தான் காமராஜர் ஆட்சி என்று குறிப்பிட்டேன். இன்று இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் காமராஜர் ஆட்சி என்கிற நமது கனவு மெய்ப்பட வேண்டுமென்றால் இன்றிலிருந்து அதற்கான உழைப்பை செலுத்தி நமது இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இங்கு உரையாற்றுபவர்கள் கருத்துகளை கூற வேண்டுமென்று கூறினேன்.
கடுமையான உழைப்பு: ஆனால், எனக்கு பின்னால் உரையாற்றியவர்கள் கூறிய சில கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு நாளேடுகளில் செய்திகளாக வெளிவந்துள்ளன. பொதுக்குழுவின் நோக்கம் என்பது காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவது தான். அதேநேரத்தில், காங்கிரஸ் பங்கேற்றிருக்கிற கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிற திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் கடுமையான உழைப்பையும், வெற்றிக்கான அவரது பங்களிப்பையும் எப்பொழுதுமே மதிக்க தவறியதில்லை. அவரது பங்களிப்பில்லாமல் நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது சாத்தியமே இல்லை என்பதை எவரும் மறுக்க முடியாது.
ஊடகங்கள் தான் காரணம்: சட்டப்பேரவையில் எனது உரைகள் அனைத்துமே தி.மு.க. தலைமையிலான ஆட்சிக்கு உற்ற துணையாகவும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கிற வகையிலும் அமைந்துள்ளதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். காங்கிரஸ் இயக்கத்தை வலிமைப்படுத்துவது இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்துவதாகும். இந்நிலையில், வெளிப்படைத்தன்மையோடு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கருத்துகளை சில ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பது மிகுந்த வேதனைக்குரியதாகும்.
இணக்கமான உறவு: தலைவர் ராகுல்காந்திக்கும், தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் இடையே இருக்கிற கொள்கை சார்ந்த இணக்கத்தின் காரணமாகவே இந்தியா கூட்டணி தமிழக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த இணக்கம் என்பது உண்மையான உணர்வின் அடிப்படையிலானது. இந்தியாவிலேயே தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முடியாமல் இருப்பதற்கு காரணம், இரு தலைவர்களிடையே இருக்கிற கொள்கை சார்ந்த இணக்கமான உறவு தான். அதனால் தான் தமிழகத்தில் மகத்தான வெற்றியை இந்தியா கூட்டணியால் பெற முடிந்தது.
சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல: எனவே, தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி என்பது கொள்கை சார்ந்த கூட்டணியே தவிர, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. கடந்த 2003 இல் தொடங்கிய இக்கூட்டணி ஒரு தேர்தலை தவிர, அனைத்து தேர்தல்களிலும் கூட்டணியாகவே தேர்தல் களத்தை சந்தித்திருக்கிறோம். எஃகு கோட்டை போல் இருக்கும் இக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த எவர் முயற்சி செய்தாலும் அது நிச்சயம் நிறைவேறாது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
டெல்லி பூதமும்.. அறிவாலயம் யுக்தியும்.. திமுகவின் ஸ்மார்ட் தேர்தல் அஸ்திரம்! பாஜக எதிர்பார்க்கலயே -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications