Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வமகள் சேமிப்பு திட்டம்.. மாத மாதம் வட்டியிலேயே அசத்தும் சுகன்யா சம்ரிதி யோஜனா.. விதிமுறை மாறுதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காக உருவாக்கப்பட்டசெல்வ மகள் சேமிப்பு திட்டம், பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்று வர என்ன காரணம் தெரியுமா? செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் இணைவது லாபமாக கருதப்பட காரணங்கள் என்னென்ன தெரியுமா?

சுகன்யா சம்ரித்தி யோஜனா என்ற செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாகும். குறைந்தபட்ச தொகையாக ஒரு நிதியாண்டிற்கு 250 ரூபாய் முதல், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

selvamagal semippu thittam sukanya samriddhi yojana

செல்வமகள் சேமிப்பு : ஆரம்பத்தில் குறைந்தபட்ச தொகை 500 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது பொதுமக்களுக்காகவே, குறைந்தபட்ச தொகையை 250 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.. இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் 15 வருடத்திற்கு பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும்... 21 வருடங்கள் கழித்து அல்லது 18 வயதை அடைந்த பிறகு இந்த திட்டம் முதிர்ச்சியடைந்துவிடும்.. இந்த திட்டத்திற்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

அதேபோல, பெண் குழந்தை 18 வயதை எட்டியதுமே, அவர்களின் கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். குழந்தை பிறந்து 10 வருடங்கள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.

பெண்குழந்தைகள்: ஆனால், ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகள் மட்டுமே சேரமுடியும். பெண் குழந்தையின் பெற்றோர் தவிர, சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கில் சேரலாம்.

அந்தவகையில், பொதுமக்களின் ஆதரவை இந்த திட்டம் பெற்றுவர என்ன காரணம் தெரியுமா? 15 வருடங்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரூ. 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 15 வருடங்களுக்கு உங்களுடைய மொத்த முதலீடு 22,50,000 ரூபாயாக இருக்கும்.

கூட்டு வட்டி: 15 வருடத்துக்கு பிறகு, கூட்டு வட்டி மட்டுமே சுமார் 46,82,648 ரூபாயாக இருக்கும். அடுத்த 6 வருடங்களுக்கு, எந்த தொகையும் நீங்கள் செலுத்தாமல் இருந்தாலும்கூட, முதலீட்டுக்கு மட்டும் தொடர்ந்து வட்டி வந்துகொண்டே இருக்கும்.. அப்படியானால், இந்த 6 வருடங்களில் உங்களுடைய வட்டி மட்டுமே, கிட்டத்தட்ட 26,12,132.26 ரூபாயாக இருக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு தொகையாக 69,32,648 ரூபாயை எளிதாக பெறலாம்.

அந்தவகையில், இந்த திட்டத்தின் வட்டி விகிதம்தான் பலருக்கும் மலைப்பை தருகிறது.. வட்டி, முதிர்வு தொகை உட்பட அனைத்துக்குமே இந்த திட்டத்தில் வரி விலக்கு உண்டு.. அதேபோல, இந்த சேமிப்பு திட்டத்திற்கு 80 C சட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு... அதுமட்டுமல்ல, செப்டம்பர் காலாண்டுக்கும் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.. அதிகபட்சமாக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்துக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.

தமிழகம் 2வது இடம்: கடந்த வருடம்வரை கணக்கிட்டால், நம்முடைய தமிழ்நாட்டிலும், செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில், 32.57 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது நம்முடைய தமிழகம்.

இப்படிப்பட்ட சூழலில், செல்வ மகள் சேமிப்புத் திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி போன்ற திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கான புதிய விதிகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரப்போவதாகவும், இந்த திட்டங்கள் தொடர்பான விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்ய போவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
சிறுசேமிப்பு திட்டம்: அந்தவகையில், தபால் நிலைய சிறு சேமிப்புத்திட்டங்களுக்கான 6 புதிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.. குறிப்பாக, சட்டவிரோத தேசிய சேமிப்புத் திட்ட கணக்கு, மைனர் பெயரில் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு, நிறைய PPF கணக்குகள், என்ஆர்ஐகளால் திறக்கப்பட்ட பிபிஎஃப் கணக்குகள், பெற்றோருக்குப் பதிலாக தாத்தா பாட்டிகளால் திறக்கப்பட்ட சுகன்யா சம்ரிதி கணக்குகள் போன்றவையாகும்.

இதில், சுகன்யா சம்ரிதி யோஜனா, பிபிஎஃப் தவிர, குழந்தைகளின் பெயரில் தொடங்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்கள் கணக்கில் சாதாரண வட்டியைப் பெறுகின்றன..

சுகன்யா சம்ரிதி கணக்கு: எனவே, சுகன்யா சம்ரிதி கணக்கு பெற்றோருக்குப் பதிலாக தாத்தா பாட்டிகளால் தொடங்கப்பட்டால் பாதுகாவலரை மாற்ற வேண்டும். இல்லையென்றால், அது சட்டப்பூர்வ பாதுகாவலருக்கு மாற்றப்படும். அதேபோல, ஒரே குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்தால் அவற்றை மூட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+