Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வ மகள் சேமிப்பு திட்டம்.. அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனாவில் நம்ப முடியாத வட்டி! அசத்தல் ஸ்பான்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கு 80 C சட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு என்பதுடன், ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.. பெற்றோர்கள் தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது டெபாசிட் செய்யலாம் என்ற வசதி உள்ளது.. இந்நிலையில், 18 வயதிற்கு மேல், படிப்பு செலவுக்காக குறிப்பிட்ட தொகையை கடனாக பெறலாம். 21 வயது முடிந்த பின், சேமிப்பு தொகை முழுவதுமாக உரியவரிடம் வழங்கப்படும் என்று வால்பாறை நகராட்சி தலைவர் நம்பிக்கையூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா என்றழைக்கப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு சிறப்பான திட்டம் ஆகும். அஞ்சல் துறை சார்பில், பெண் குழந்தைகளுக்கென்றே இந்த திட்டத்தை, 2015ல் மத்திய அரசு அறிமுகம் செய்தது.

Selvamagal Semippu Thittam Sukanya Samriddhi Yojana

செல்வமகள் சேமிப்பு திட்டம்

இதில், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்காக, பெற்றோர், பாதுகாவலர் கணக்கு ஆரம்பிக்கலாம்.. பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில், குறைந்தபட்ச தொகையாக ஒரு நிதியாண்டிற்கு 250 ரூபாய் முதல், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். 15 வருடத்திற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.

21 வருடங்கள் கழித்து அல்லது 18 வயதை அடைந்த பிறகு இந்த திட்டம் முதிர்ச்சியடைந்துவிடும்.. 18 வயதை எட்டியதுமே, அவர்களின் கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம்.

ஒருவேளை பெண் குழந்தையின் 10ம் வகுப்பு முடித்தோ அல்லது 18 வயது கடந்தாலோ உயர் கல்விக்காக 50% தொகையை எடுத்துக் கொள்ளலாம்..

பிறப்பு சான்றிதழ்

இத்திட்டத்தில் மாதம் மாதம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. பெற்றோர்கள் தங்களிடம் எப்போது பணம் இருக்கிறதோ இந்த சேமிப்பு திட்டத்திற்கு 80 C சட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.

இந்த திட்டத்தில் கணக்கினை துவங்குவதற்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் மற்றும் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கணக்கினைத் துவங்க முடியும்.
10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழை பெற்றதுமே, குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தங்களுடைய ஆதார் அட்டை எண், பான் கார்டு, 2 புகைப்படங்களை வைத்து பெண் குழந்தைகளுக்கான கணக்கை ஆரம்பிக்கலாம்.

முகாம்கள், மேளா, நற்சான்றிதழ்கள்

எனவேதான், இந்த திட்டம் குறித்த முகாம்கள் தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

அதேபோல ஒவ்வொரு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டும், தபால் துறையின் சார்பில் மாவட்டந்தோறும் அனைத்து தபால் நிலையங்களிலும் செல்வமகள் சேமிப்புத்திட்ட கணக்குகள் தொடங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன..

இந்த திட்டத்தின் பயனாளிகளை ஊக்குவிக்கும் வகையில், முதுநிலை தபால் கண்காணிப்பாளர் சார்பில் நற்சான்றிதழ்களும் இந்த முகாம்களில் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனை தவிர, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில், 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளை சேர்ப்பதற்கான சிறப்பு மேளாவும் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன.

Selvamagal Semippu Thittam Sukanya Samriddhi Yojana

கோவை மாவட்டம் வால்பாறை

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில், செல்வமகள் சேமிப்பு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது..

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் செயல்படும் அஞ்சலகங்களில், பொள்ளாச்சி தபால் கோட்ட கண்காணிப்பாளர் சாந்தினிபேகம் உத்தரவின்பேரில், கோட்ட ஆய்வாளர் வெங்கட் தலைமையில் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஸ்பான்சர் மூலம், எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கையில், அஞ்சலக ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்..

இதனடிப்படையில் வால்பாறை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, 40 பெண் குழந்தைகளுக்கு தலா 250 ரூபாய் வீதம் என்று மொத்தம் 10,000 ரூபாயை போஸ்ட் மாஸ்டர் கீதாஞ்சலியிடம் வழங்கினார்.

மாதந்தோறும் சேமிப்பு

பிறகு இதுகுறித்து அஞ்சலக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "வால்பாறையில் உள்ள அஞ்சலகங்களில், 700க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் சேரும் பெண் குழந்தைகள் மாதம் தோறும் தங்களால் இயன்ற தொகையை சேமிப்பு கணக்கில் செலுத்தலாம்.

18 வயதிற்கு மேல், பெண் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக குறிப்பிட்ட தொகையை கடனாக பெறலாம். 21 வயது முடிந்த பிறகு, சேமிப்பு தொகை முழுவதுமாக உரியவரிடம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+