தவெக கூட யாருங்க பேசினா.. காங்கிரஸ் கேட்பதை ஸ்டாலின் கொடுப்பார்.. செல்வப்பெருந்தகை பரபர விளக்கம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்தாலும் காங்கிரஸ் கட்சி குட்டையை குழப்பி கொண்டிருக்கிறது. திமுக சொல்லும் 25 தொகுதிகள் போதாது. தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். இது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் செல்வப்பெருந்தகை பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், "எல்லா தேர்தல்களிலும் கூட்டணி பேச்சுவார்த்தை இப்படித்தான் இருக்கும். எல்லா கட்சிகளுமே கூடுதல் சீட்கள் கேட்பது இயல்பு. இறுதியாக அது முடிவு செய்யப்படும். இந்த முறையும் அது சுமூகமாக நிறைவேறும். நாங்கள் கூடுதல் இடங்களை கேட்பது உண்மை. அவர்களும் எங்கள் கேட்பதை நல்லபடியாக கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் (Selvaperunthagai).

சிறிய கட்சிகளே அதிகம் கேட்கறாங்க
இதில் பிரச்சனையோ, விவாதமே, குழப்பமோ எதுவும் இல்லை. தற்போதைய நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பாக மகிழ்ச்சியாக போய் கொண்டிருக்கிறது. திமுக - காங்கிரஸ் இந்தியா கூட்டணி மிகவும் இயற்கையானது. கொள்கை ரீதியாக உருவான கூட்டணி. இங்கு கருத்து வேறுபாடு என்பதே இல்லை. தேர்தலில் சிறிய சிறிய கட்சிகளே அதிக இடங்கள் கேட்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணி
எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்போம். முதலமைச்சர் ஸ்டாலின் அதை பரிசீலனை செய்வார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும், எங்கள் டெல்லி தலைவர்கள், தமிழ்நாடு அரசியல் களம், மக்கள் என்ன நினைக்கிறார்கள், கூட்டணி உள்ளிட்டவற்றை கேட்பது ஆய்வு செய்வார்கள்.
தவெக பற்றி விளக்கம்
இந்த தேர்தல் பணிகள் மிகவும் சகஜமானவை. நாங்கள் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தவெகவுடன் பேசினோம் என யார் சொன்னார்கள். நான் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். நான் தவெகவுடன் பேசவில்லை. எனக்கு அங்கு யாரையும் தெரியாது. நேரடியாகவோ, மறைமுகவாகவோ தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லி தேசிய தலைமை எந்த வழிநடத்துதலும் கொடுக்கவில்லை.
திமுக கூட்டணியில் தான்..
காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்கது. 140 வருடங்கள் பழமையான கட்சி. எங்களுக்கு பின் வாசலில் பேச்சுவார்த்தை நடத்தும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசித்தான் பழக்கம். எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக தான் பேசுவோம். இதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது. நாங்கள் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்" என்றார்.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
சி.வி.சண்முகத்திற்கு ஜாக்பாட்!தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ரெடி! தவெக பேச்சுவார்த்தை? -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
ஆதவ் அர்ஜுனா பதவிக்கு சிக்கல்? அதிமுக எம்.பி இன்பதுரை வைத்த லீகல் பாயிண்ட்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு












Click it and Unblock the Notifications