"கூட்டணி பற்றி இனி யாரும் வாய் திறக்காதீங்க”.. காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு செல்வப்பெருந்தகை ஆர்டர்!
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் கருத்து தெரிவிக்க வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தி உள்ளார். "இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது. மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் செயல்படக் கூடாது" என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் பூசல்கள் வலுத்து வருகின்றன. திமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த காங்கிரஸ் கட்சி குழு அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், திமுகவை விமர்சித்து வருகின்றனர். இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று பேசி வருவதாகத் தெரிகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. இதனால் இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற குரலும் காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்துள்ளது. இது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், "சமீபகாலமாக தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத பா.ஜ.க.வை சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி கூட்டணி அமைப்பதற்கு பல்வேறு முயற்சிகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கொண்டு வருகிறார். அந்த கூட்டணியில் சேர விரும்பாதவர்களை வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பயன்படுத்தி, அச்சுறுத்தி கூட்டணியில் சேர நிர்ப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
மத்திய பா.ஜ.க. அரசின் அடக்குமுறையினால் பாதிக்கப்படாத அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறுகிற அளவிற்கு அவர்களது நடவடிக்கை அமைந்திருக்கிறது. திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விஷயங்களை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் கொள்கை சார்ந்த மதவாத, வகுப்புவாத சக்திகளை தமிழ்நாட்டில் காலூன்ற முடியாத அளவிற்கு தடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.
கடந்த 2004 இல் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 2024 வரை, 2014 ஒரு தேர்தலை தவிர கூட்டணி அமைத்து தமிழ்நாட்டில் போட்டியிட்டிருக்கின்றன. இதில் குறிப்பாக 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவை தேர்தல்களில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட வகுப்புவாத, ஊழல் சக்திகளை தோற்கடித்து தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஆதரிக்கிற கூட்டணியாக இந்தியா கூட்டணி திகழ்ந்து வருகிறது.
இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சி வெற்றி பெறுமேயானால், அதனால் பலனடையப் போவது அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி தான். அ.தி.மு.க.வை பயன்படுத்தி வகுப்புவாத பா.ஜ.க, தமிழ்நாட்டில் காலூன்ற கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா கூட்டணியை பலகீனப்படுத்துகிற முயற்சியின் மூலம் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு பின்னடைவு ஏற்படுத்துவற்கு எந்த வகையிலும் காங்கிரஸ் கட்சியினர் அனுமதிக்கக் கூடாது.
சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அவர்கள் கூறியபடி, காங்கிரஸ் கட்சி அமைத்த ஐவர் குழுவினர் தி.மு.கவுடன் முதற்கட்டமாக பேசியிருக்கிறார்கள். காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை, அகில இந்திய காங்கிரஸ் தலைமையோடு கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய நிலையில், இதுகுறித்து பொதுவெளியில் காங்கிரஸ் கட்சியினர் எவரும் கருத்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
அகில இந்திய அளவில் தலைவர் ராகுல்காந்தி அவர்கள், நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உறுதுணையாக தமிழ்நாட்டில், புதுச்சேரி உட்பட தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட 40 மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களும் ஆக மொத்தம் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பின்னால் நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி சார்பாக வகுப்புவாத பா.ஜ.க.வை எதிர்த்து கடுமையான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இதனால் மிகப்பெரிய அடக்குமுறையை எதிர்கொண்டு வருகிறார்கள். இத்தகைய அரசியல் பின்னணியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டின் நலனில் அக்கறையோடு, தேசிய நலனையும் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய கடமையும், பொறுப்பும் காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதை கொள்கை ரீதியாக சிந்தித்து செயல்பட வேண்டுமென காங்கிரஸ் பேரியக்க நண்பர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்." என வலியுறுத்தி உள்ளார்.
-
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
Rs 8000 Gift Voucher: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000 கூப்பன் எங்கே கிடைக்கும்? விண்ணப்பிப்பது எப்படி? -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்!












Click it and Unblock the Notifications