பாண்டியன் "சுட தெரியும்" என்கிறாரே.. என்ன பேச்சு இதெல்லாம்.. ரொம்ப ஆபத்து.. எகிறிய செல்வப்பெருந்தகை
ஓய்வுபெற்ற கர்னல் பாண்டியன் சர்ச்சை பேச்சுக்கு தமிழக காங்கிரஸின் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "எங்களுக்கும் குண்டு போட தெரியும், சுட தெரியும், தமிழ்நாட்டிற்கும், தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தான் ஒரு ஓய்வுபெற்ற ராணுவவீரர் என்றும் கருதாமலும், சமூக அக்கறையில்லாமலும், பொறுப்பில்லாமலும் பொதுவெளியில் இதுபோல் பேசியிருப்பதை கண்டிக்கின்றேன்" என்று ஓய்வுபெற்ற கர்னல் பாண்டியன் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், திமுக கவுன்சிலர் சின்னசாமிக்கு இடையே கடந்த 8-ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது. அது பின்னர் கைகலப்பானது.
இதில், பிரபாகரன், படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார்.. குடிதண்ணீர் தொட்டி அருகே துணி துவைத்ததில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே பிரபு அடித்துக்கொல்லப்பட்டது உறுதியானதுடன், இதில், தொடர்புடைய திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

கர்னல் பாண்டியன்
எனினும், இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது.. ராணுவ வீரர் கொலை சம்பவத்தை கண்டித்து பாஜகவின் முன்னாள் ராணுவ பிரிவு சார்பாக போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ராணுவ வீரருமான பாண்டியன் பேசியபோது, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்.. உலகத்திலேயே மிகப்பெரிய ஒழுக்கமானது இந்திய ராணுவம், அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழக அரசுக்கும் நல்லதல்ல.. நாங்கள் எந்த ஒரு விஷயத்தை செய்தாலும் ஒழுக்கமாக செய்பவர்கள்.

செல்வப்பெருந்தகை
அப்படிப்பட்ட எங்களுக்கு பரிட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. இங்கு அமர்ந்திருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு குண்டு வைப்பதில் கெட்டி காரர்கள், சுடுவதில் கெட்டிக்காரர்கள், சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள், ஆகையினால் இந்த வேலைகள் எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே எங்களை இதனை செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து பேசியிருந்தது, மிகுந்தது பரபரப்பையும், அதையொட்டிய கண்டனங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.. அந்த வகையில், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, பாண்டியன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதெல்லாம் பேச்சா
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிப்ரவரி 8ம் தேதியன்று கிருஷ்ணகிரியில் அண்டை வீட்டார்களுடன் ஏற்பட்ட அடிதடி பிரச்சனையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து ராணுவவீரர் பிரபு அவர்கள், பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி இறந்துவிடுகிறார். உடனே, தமிழ்நாடு காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி, வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்துள்ளார்கள். ஆனால், தமிழ்நாடு பா.ஜ.கவினர், வேண்டுமென்றே இந்த அடிதடி பிரச்சனையை திசைத்திருப்பி,ஆளும் தி.மு.கழக அரசின் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கத்துடன் வீணான பழி சுமத்தி அரசியல் லாபம் அடைய நினைக்கின்றார்கள்.

பாண்டியன் பேசலாமா
இந்தநிலையில் நேற்று தமிழ்நாடு பா.ஜ.கவினர் சென்னையில் நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய ஓய்வுபெற்ற கர்னல் பாண்டியன் அவர்கள், எங்களுக்கும் குண்டு போட தெரியும், சுட தெரியுமென்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழக அரசுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக தான் ஒரு ஓய்வுபெற்ற ராணுவவீரர் என்றும் கருதாமலும், சமூக அக்கறையில்லாமலும், பொறுப்பில்லாமலும் பொதுவெளியில் இதுபோல் பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இதுபோன்ற அநாகரீகமான, ஆபத்தான பேச்சுகளை உடனடியாக காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இல்லாவிட்டால், இவ்வாறு பேசுவது வழக்கமாகிவிடும். மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications