ஸ்டாலினை ஏன் செல்வப்பெருந்தகை சந்திக்குறாரு? அதுவும் காங்கிரஸ் எம்பிக்களுடன்? ஜோதிமணி சொன்னதுக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் சரிவர இணக்கமான போக்கு இல்லை என்ற பேச்சு கடந்த 2 வருட காலமாகவே உள்ளது.. விரைவில் தேர்தல் வரஉள்ள நிலையில், இரு கட்சிகளுக்குள்ளும் சுமூக உறவு குறைந்து வருவதாகவும் கூறப்படும் நிலையில், தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடன் அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார்.. இது தமிழக அரசியலின் கவனத்தை பெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தின் திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி, சமீப நாட்களாகவே மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்களை திமுகவில் இணைத்து வருகிறார். அந்த வரிசையில், கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, திமுகவில் இணைந்துகொண்டதாக பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

Selvaperunthagai Stalin Jothimani

திமுக - காங்கிரஸ் கூட்டணி விரிசல்

திமுகவும் காங்கிரஸும் கூட்டணியில் உள்ளபோது, செந்தில் பாலாஜியின் இந்த பதிவு செயல் காங்கிரஸ் தரப்பில் சலசலப்பையும், அதிருப்தியையும் உண்டுபண்ணிவிட்டதாக தெரிகிறது.

அதிலும் ஜோதிமணி உடனடியாக ரியாக்ட் செய்திருந்தார்.. கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும், இதுபோன்ற அவமரியாதையை எளிதில் கடந்து போய்விட முடியாது, கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும், இந்த விவகாரத்தை முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு செல்வப்பெருந்தகை கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் காட்டமாக கூறியிருந்தார். பேசியிருந்தார்.

ஜோதிமணி கம்ப்ளைண்ட்

தமிழகத்தில் 9 காங்கிரஸ் எம்பிக்கள் உள்ள நிலையில், செந்தில் பாலாஜியும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் கரூர் மாவட்டத்தில் மோதல் போக்கில் ஈடுபட துவங்கியதிலிருந்தே கூட்டணிக்குள் விரிசல் விழ துவங்கிவிட்டதாக முணுமுணுப்புகள் எழுந்தன..

கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கையை முன்னாள் தலைவர் அழகிரி அன்று கொளுத்தி போடவும், அது திமுகவுக்கு கடுப்பையே தந்திருந்தது.. இதே கருத்தைதான், சட்டப்பேரவை கட்சி தலைவரான ராஜேஷ்குமாரும் தற்போது ஆட்சியில் பங்கு என்று சொல்லி வருகிறார்..

கூட்டணி ஆட்சி

அதுமட்டுமல்ல, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினால் திமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவும், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளோம், ஆட்சியில் பங்கு கொடுக்கும் கட்சியோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார் என்று கூறியதும் என்று பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.ஜே.சுரேஷ் கூறியிருந்தது அதற்கு மேல் திமுகவுக்கு எரிச்சலை தந்துவிட்டதாம்.

இதனை தவிர, சில காங்கிரஸ் எம்பிக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள், அலுவலகம் அமைத்து தரவில்லை என்றும், காங்கிரஸ் எம்பிகளுக்கு சில திமுக நிர்வாகிகளால் இடையூறுகளும் தரப்படுகின்றன என்றும் புகைந்து கொண்டிருக்கின்றன.. மொத்தத்தில்,காங்கிரஸ்- திமுக இடையே கடை நிலையில் சுமூகமான உறவு இல்லை என்கிற அளவுக்கு தற்போது பேசப்பட்டு வருகிறது.

எதற்காக இந்த திடீர் சந்திப்பு

இப்படிப்பட்ட சூழலில்தான், இன்று முதலமைச்சரை சந்தித்து பேசுகிறார் செல்வப்பெருந்தகை.. இது எதற்கான சந்திப்பு என்று தெரியவில்லை..

செந்தில் பாலாஜி போட்ட பதிவு குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி, ஜோதிமணி சொல்லியிருந்ததால், அதுகுறித்து முதல்வரை செல்வப்பெருந்தகை சந்திக்க போகிறாரா? அல்லது இரு கட்சிகளும் ஒற்றுமையுடன்தான் இருக்கின்றன என தமிழக மக்களுக்கு தெரிவிக்க இந்த சந்திப்பை நடத்துகிறாரா? தெரியவில்லை.

ஆனால், காங்கிரஸ் எம்பிக்கள் மற்றும் உள்ளூர் திமுகவினருக்குள் ஒற்றுமை இல்லாதது, இடையூறுகள் குறித்து செல்வப்பெருந்தகை முதல்வரிடம் புகார் சொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், அதனால்தான், முதலமைச்சரை சந்திக்க செல்லும்போது, காங்கிரஸ் எம்பிக்களையும் தன்னுடனேயே அழைத்து செல்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பலவிதமான அரசியல் பரபரப்புகளுக்கு நடுவில் முதல்வருடன் இன்று நடக்கும் சந்திப்பு முக்கியத்துவம் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+