எனக்கு எதுவும் தெரியாது.. பொன்முடி வழக்கில் திடீரென பிறழ்சாட்சியாக மாறிய நபர்.. மிகப்பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் இன்று மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது. வழக்கில் மேலும் ஒருவர் பிறழ்சாட்சியாம் அளித்த காரணத்தால் இன்று மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது.

கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிக் காலத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூா் அடுத்துள்ள பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாகச் செம்மண் அள்ளியதாகப் புகார் எழுந்தது.

இதன் மூலம் அரசுக்கு சுமார் 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகனும் தற்போதைய கள்ளக்குறிச்சி எம்பியுமான கவுதமசிகாமணி, உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதன் பிறகு 2012இல் விழுப்புரம் குற்றப் பிரிவு போலீசார் இந்த வழக்கைப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணை நடந்து வந்த போதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்துவிட்டார்.

Semman Quarry case Ponmudi One more person turns on MHC on the case

இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 சேர்க்கப்பட்ட நிலையில், அவர்களில் 11 பேரிடம் மட்டுமே விசாரணை நடத்தப்பட்டது. அவர்களில் 9 பேர் பிறழ் சாட்சியமளித்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடந்த நிலையில், கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் இருவர் மட்டுமே ஆஜராகினர்.

மற்றவர்கள் நேரில் ஆஜராகாத நிலையில், அதற்கான காரணத்தை திமுக வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. வழக்கில் மேலும் ஒருவர் பிறழ்சாட்சியாம் அளித்த காரணத்தால் இன்று மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது.

வழக்கில் நேற்று அரசு தரப்பு 17வது சாட்சியாக வந்தவர் வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தினார். ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ., அனந்தசயனன் பிறழ் சாட்சியம் அளித்தார். இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும்.. நடந்த சம்பவம் பற்றி தனக்கு எனக்கு எந்த விஷயமும் தெரியாது என்று கூறினார். வழக்கில் மேலும் ஒருவர் பிறழ்சாட்சியாம் அளித்த காரணத்தால் இன்று மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கு: ஏற்கனவே சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் எம்எல்ஏ பதவி பறிபோனதால் திமுகவின் பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அந்த தொகுதிக்கு எப்போது இடைத்தேர்தல் நடக்கும் என்பது பற்றிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இதனை எதிர்த்து பொன்முடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என அவர் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இத்தகைய சூலில் தான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது எம்எல்ஏ பதவி தானாக காலியாகி விட்டது. ஆனால் அவரது தொகுதி மட்டும் காலியானதாக அறிவிக்கப்படவில்லை. தொகுதி காலியானதாக அறிவித்தால் மட்டுமே அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இதுதொடர்பாக சட்டசபை சபாநாயகர் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+