சென்னை மக்களே.. டர்ரு புர்ருன்னு வண்டி ஓட்டுறாங்களா.. ஜஸ்ட் ஒரு கிளிக்.. வாட்ஸ்அப் பண்ணுங்க.. முடிஞ்
சென்னை: சென்னையில் சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து வீடியோ, போட்டோ எடுத்து போக்குவரத்து காவல்துறை ட்விட்டர், பேஸ்புக்,வாட்ஸ் அப் 9003130103 போன்ற சமூக வலைதளங்கள் மூலமாக புகார் அளிக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சாலையில் போக்குவரத்து போலீசார் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு அபராதம் மற்றும் வழக்கும் பதிவு செய்வது வழக்கம். மேலும் மக்கள் தொகை அதிகமாக இருக்கிற காரணத்தினால் ஏ.என்.பி.ஆர் போன்ற சிசிடிவி கேமராக்களை பயன்படுத்தியும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை வைத்து உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

இருப்பினும் தொடர்ந்து நடைபெறும் போக்குவரத்து விதிமீறல்களை கண்டு, உண்மையாக விதிகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள் தங்கள் குமுறல்களை, ஆதங்கத்தை வெளிப்படுத்தினாலும் என்ன பயன் என்று புலம்பிய படி செல்லக்கூடிய காட்சிகளை நாம் சாலையில் பார்த்துள்ளோம்.
தற்போது சென்னை போக்குவரத்து காவல்துறையின் புதிய நடவடிக்கையாக, போக்குவரத்தை ஒழுங்காக கடைபிடிக்கும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதியை மீறும் வாகன ஓட்டிகளை தட்டிகேட்டால் தேவையில்லாமல் பிரச்சனை ஏற்படுமோ என அஞ்சாமல், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை பார்த்தால் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் சென்னை போக்குவரத்து காவல் துறையின் Greater chennai traffic police என்ற ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதி போக்குவரத்து காவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, புகாரை விசாரித்து உடனடியாக அபராதமும் வழக்கும் பதிவு செய்கின்றனர். இந்த நடவடிக்கை மேற்கொண்டது தொடர்பாக புகார் அளித்த நபருக்கு புகைப்பட ஆதாரங்களுடன் சென்னை போக்குவரத்து காவல்துறையின் சமூக வலைதள பக்கம் மூலம் பதிலளிக்கின்றனர்.