Sengottaiyan: பதவியில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்..ஒரே குரலாக ஒலித்த மாஜிக்கள்! எடப்பாடி என்ன தான் பேசுனாரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரிந்து சென்ற அதிமுகவினரை ஒன்றாக சேர்க்க வேண்டுமென பேசிய செங்கோட்டையனை கட்சி பதவியில் இருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. திண்டுக்கல் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன பேசினார்? முன்னாள் அமைச்சர் என்ன பேசினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் மீண்டும் ஒரு புதிய அணி உருவாகி இருக்கிறது. பிரிந்து சென்ற அதிமுகவினரை ஒன்று சேர்க்க வேண்டும் என பேசிய செங்கோட்டையன் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் பிரிந்து சென்ற அதிமுகவினரை மீண்டும் சேர்க்க வேண்டும் அப்போதுதான் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியும் என பேசி இருந்தார்.

Sengottaiyan

செங்கோட்டையன் நீக்கம்

அவரது இந்த பேச்சு அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்படலாம் என நேற்று கூறப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் சென்ற எடப்பாடி பழனிச்சாமி இன்று தான் தங்கியிருந்த தனியார் நட்சத்திர விடுதியில் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில் கட்சியின் பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி பழனிசாமி

கூட்டத்திற்கு பிறகு செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது, கட்சி பொறுப்புகளில் இருந்து மட்டுமே அவர்கள் நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி செங்கோட்டையன் அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்தும் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டு இருக்கிறார்,

செங்கோட்டையன் ஆதரவாளர்கள்

மேலும் செங்கோட்டையனின் ஆதரவாளர்களின் கட்சி பதவிகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக நம்பியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து கே.ஏ சுப்ரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.ஈஸ்வர மூர்த்தி, கோபிச்செட்டிபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்.டி.குறிஞ்சிநாதன், அந்தியூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து எம்.தேவராஜ் நீக்கப்பட்டுள்ளனர்.

என்ன பேசினார்?

மேலும், அத்தாணி பேரூராட்சி செயலாளர் பொறுப்பில் இருந்து எஸ்.எஸ்.ரமேஷ், ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் கே.எஸ்.மோகன் குமார் ஆகியோரது பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன தான் பேசினார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

ஓபிஎஸ் சசிகலா

பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் நிபந்தனையை ஏற்க இபிஎஸ் மறுத்ததோடு, குறிப்பாக ஓபிஎஸ் சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் சேர்க்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

அடிப்படை உறுப்பினர்

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்தை கூட்டத்தில் பங்கேற்று இருந்த திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி, வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் செங்கோட்டையனின் பேச்சுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் அவரது கட்சிப் பதவியை மட்டும் பறிக்கலாம் எனவும், மிக மூத்த உறுப்பினரான அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டாம் என சில நிர்வாகிகள் ஒரே குரலாக ஒலித்ததாக கூறப்படுகிறது. அதனால் தான் செங்கோட்டையனின் கட்சி பதவியை மட்டும் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+