தவெக மீது அப்செட்டா? செயல் வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சை பார்த்தால் அப்படி தெரியலயே
சென்னை: தவெகவிற்கு அவசரப்பட்டு வந்துவிட்டோமோ என செங்கோட்டையன் யோசித்து வருவதாக கூட அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. ஆனால், அதில் துளியும் உண்மை இல்லை என்பது போல செங்கோட்டையன் இன்றைய பேச்சு அமைந்துள்ளது. எதிர்கால தமிழகத்தின் அரசியல் ஹீரோ விஜய்தான் என்று பேசியிருக்கும் செங்கோட்டையன் தன்னை பற்றி நிலவிய வதந்திகளுக்கும் இன்றைய பேச்சின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்புக்காக குரல் கொடுத்த செங்கோட்டையன் அந்தக் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதையடுத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு அக்கட்சியில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

செங்கோட்டையனுக்கு ஏமாற்றம்
அரசியலில் கிட்டதட்ட 50 ஆண்டு கால அனுபவம் கொண்ட செங்கோட்டையன், விஜய்யின் கட்சியில் இணைந்ததில் இருந்தே படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தவெகவில் தினசரி பேட்டி கொடுக்கும் ஒரு நபராக சமீப காலமாக செங்கோட்டையன் மட்டுமே உள்ளார். கட்சி அலுவலகங்கள் திறப்பது, கட்சியினர் நலத்திட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என படு பிசியாக இருந்த செங்கோட்டையன், அதிமுகவில் உள்ள அதிருபதி தலைவர்களை தவெகவிற்குள் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டார்.
ஜேசிடி பிரபாகரன் உள்ளிட்ட ஒரு சிலரே வந்தாலும் செங்கோட்டையன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோரை தவெக கூட்டணிக்குள் கொண்டு வர செங்கோட்டையன் தீவிர முயற்சி மேற்கொண்டார். தை மாதம் பிறந்த பிறகு அதிரடி திருப்பங்கள் நடக்கும் என்றெல்லாம் செங்கோட்டையன் பேசிய நிலையில், டிடிவி தினகரன் டிமிக்கி கொடுத்துவிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.
அப்செட்டில் இருந்தாரா செங்கோட்டையன்
அதேபோல, ஓ பன்னீர் செல்வமும் தயக்கம் காட்டியதாக தெரிகிறது. அவரது அணியில் இருந்தவர்களும் திமுகவில் இணைந்தார்களே தவிர தவெக பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. செங்கோட்டையன் சொன்னபடி கூட்டணிக்கு யாரையும் இழுத்து வர முடியாத நிலை ஏற்பட்டது. இன்னொரு பக்கம் பிரசார ஒருங்கிணைப்பு குழுவில் ஆதவ் அர்ஜுனாவிற்கு அடுத்த இடத்தில் செங்கோட்டையன் பெயரை போட்டது.
விஜய்யை எளிதில் சந்தித்து பேச முடியாத நிலை இருந்தது போன்றவற்றால் செங்கோட்டையன் கடும் அப்செட்டில் இருப்பதாக சொல்லப்பட்டது. தவெகவிற்கு அவசரப்பட்டு வந்துவிட்டோமோ என செங்கோட்டையன் யோசித்து வருவதாக கூட அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. ஆனால், அதில் துளியும் உண்மை இல்லை என்பது போல செங்கோட்டையன் இன்றைய பேச்சு அமைந்துள்ளது. தவெக செயல்வீர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் கூறியதாவது:-
என்னுடன் பலரும் செல்பி எடுக்கிறார்கள்
இன்று எல்லாரும் விசிலை கையில் வைத்து உள்ளீர்கள்.. ஆனால் நாளை காவல்துறையினர் கூட விசிலை கையில் வைக்க முடியாத சூழல் ஏற்படலாம். ஏன் பஸ்களில் கண்டக்டர் கூட இனி விசில் ஊத முடியாத நிலை ஏற்படக் கூடும். இங்கே கர ஒலியை பார்க்கிறேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டம் நடந்தது. பாதி மகளிர் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த தலைவர் திமுகவை வீழ்த்துவோம் என்று மேடையில் கூறுகிறார். ஆனால் அங்கு இருக்கும் யாரும் கை கூட தட்டவில்லை.
ஆனால் திமுகவை வீழ்த்த கூடிய ஒருவர் யார் என்றால் அது தலைவர் விஜய் தான். 8 பேர் கூட்டணி, 10 பேர் கூட்டணி இதையெல்லாம் தூள் தூளாக்குகின்றவர் யார் என்றால் அது தளபதி விஜய்க்கு தான் உண்டு. பல தலைவர்களை பார்த்து இங்கு வந்திருக்கிறேன். புரட்சித் தலைவரை பார்த்து இருக்கிறேன். விஜய்யோடு இணைந்த பிறகு தான் என்னுடன் பலரும் செல்பி எடுக்கிறார்கள். போகும் இடம் எல்லாம் கூட்டம்..
இந்தியாவில் யாருக்கும் இல்லாத புகழ் விஜய்க்கு இருக்கிறது. நம்முடைய நோக்கம் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய நோக்கம் இருக்கிறது. 1000 கோடியை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறார் என்றால், அவரது ஆற்றலையும், தொலைநோக்கு சிந்தனையையும் மக்கள் பார்த்துக்கொண்டு உள்ளனர்.
ஓட்டு போய்விடும்
தமிழ்நாட்டில் விஜய் முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. விஜய்யோடு இணைந்த பிறகு தான் என்னுடன் செல்பி எடுக்கிறார்கள். திமுகவை வீழ்த்தக் கூடிய சக்தி விஜய் ஒருவரிடம் தான் உள்ளது. விஜய் வருகைக்கு பிறகு எல்லா கட்சித் தலைவர்களும் ஆடிப்போய் உள்ளார்கள். ஏனென்றால் எல்லார் வீடுகளிலும் விஜய்க்கு ஓட்டு உள்ளது.
திமுக கட்சிக்காரர் வீட்டிலும், அதிமுக கட்சிக்காரர் வீட்டிலும், பாஜக கட்சிக்காரர் வீட்டிலும் என எந்த வீட்டை எடுத்துக்கொண்டாலும் விஜய்க்கு ஓட்டு உள்ளது. விசிலை எச்சரிக்கையாக பயன்படுத்துங்கள்.. முதியவர்கள், தூங்கிக் கொண்டு இருப்பவர்களிடம் திடீரென கிட்டே போய் அடித்துவிடாதீர்கள். ஏனென்றால் ஓட்டு போய்விடும். இவ்வாறு அவர் கூறினார். எதிர்கால தமிழகத்தின் அரசியல் ஹீரோ விஜய்தான் என்று பேசியிருக்கும் செங்கோட்டையன் தன்னை பற்றி நிலவிய வதந்திகளுக்கும் இன்றைய பேச்சின் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
-
சென்னை சாலைகளில்.. களமிறக்கப்படும் 'இன்ஃப்ராரெட்' அஸ்திரம்.. வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னையில் ஓட்டல்கள், டீக்கடைகள் மூடல்! வெளியூர் தொழிலாளர்கள் உணவுக்காக தவிப்பு -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கு பரவுமா? சென்னையில் பீதி.. பொது சுகாதாரத்துறை விளக்கம் -
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications