Tvk Sengottaiyan: விஜய் கட்சியில் சேர்ந்தாலும்.. பழச மறக்காத செங்கோட்டையன்! சட்டை பையில் இருந்த போட்டோவ பாத்தீங்களா
சென்னை: தவெகவில் இணைவதற்காக இன்று பனையூர் அலுவலகம் வந்த செங்கோட்டையன் தனது சட்டைப் பையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படத்தை வைத்து இருந்தார். கட்சி மாறினாலும் மறைந்த தனது தலைவரை செங்கோட்டையன் மறக்க மாட்டார் என்பதை காட்டும் விதமாக இந்த செயல்பாடு அமைந்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.
அதிமுகவில் மிக மூத்த நிர்வாகியாக விளங்கிய செங்கோட்டையன், கட்சியை ஒருங்கிணைப்பது தொடர்பாக முயற்சி மேற்கொண்டார். இதனால், அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்துள்ளர். இதற்காக நேற்று பட்டினப்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் செங்கோட்டையன் அவரை சந்தித்தார்.
செங்கோட்டையன் யாருடன் இணைய போகிறார் என்று அரசியல் வட்டாரத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்த சஸ்பென்ஸ் நேற்றுடன் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இன்று காலை பனையூர் அலுவலகம் வந்த செங்கோட்டையன் , தவெகவில் முறைப்படி தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகம் வந்த செங்கோட்டையனை வாசல் வரை சென்று புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா அழைத்து வந்தனர்.
செங்கோட்டையனுடன் அவரது ஆதரவாளர்கள் 82 பேர் தவெகவில் இணைந்தனர். இதில் முன்னாள் எம்பி சத்யபாமாவும் ஒருவர் ஆவார். நேற்று விஜய்யை சந்தித்த பிறகு முட்டுக்காட்டில் உள்ள ரிசார்ட்டில் தங்கிய செங்கொட்டையன் இன்று காலை பனையூர் வந்தார். பனையூர் அலுவலகம் வந்த போதும் செங்கோட்டையன் வழக்கம் போல தனது சட்டை பையில் ஜெயலலிதா புகைப்படம் வைத்து இருந்தார்.
தமிழகத்தில் அரசியல் கட்சியினரை பொறுத்தவரை தங்கள் கட்சியின் தலைவர் புகைப்படம் பொறித்த உறுப்பினர் அட்டையை சட்டை பையில் வைத்து இருப்பதை பார்க்க முடிகிறது. இதுபோலவே, செங்கோட்டையன் ஜெயலலிதா புகைப்படமும் வைத்து இருப்பார். தற்போது தவெகவில் இணைய வந்தபோது, ஜெயலலிதா போட்டோவை மறக்காமல் தனது சட்டபையில் செங்கொட்டையன் வைத்து இருந்தார்.












Click it and Unblock the Notifications