Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆழ்வார்பேட்டை டூ பனையூர்: விஜய்யை பார்க்க சென்ற செங்கோட்டையன்? மீண்டும் வீட்டுக்கே ரிட்டர்ன்! ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து அதிமுக கொடி கட்டாத காரில் புறப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மீண்டும் அரை மணி நேரத்தில் வீட்டுக்கே திரும்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எம்எல்ஏ பதவியை அவர் இன்று ராஜினாமா செய்யக் கூடும் என சொல்லப்பட்ட நிலையில் அவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவாக உள்ளவர் செங்கோட்டையன்.

sengottaiyan vijay tvk

இவர் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என குரல் கொடுத்திருந்தார். இதனால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து செங்கோட்டையன், சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ்ஸுடன் இணைந்து அதிமுகவை ஒன்றிணைக்க பாடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் அவர் தவெகவில் இணைகிறார் என தகவல்கள் சொல்லப்படுகின்றன.

தவெகவில் செங்கோட்டையன்?

அவர் நாளை நவம்பர் 27ஆம் தேதி தவெகவில் இணைகிறார் என்றும் அவருடன் சேர்ந்து முன்னாள் எம்பி சத்தியபாமா மற்றும் அவர்களது ஆதரவாளர்களும் இணைகிறார்கள் என சொல்லப்பட்டது. இதற்கு முன்பு கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் வேறு கட்சியில் இணைந்தால் எந்த கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்களோ அந்த எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

அந்த வகையில் அவர் நாளை தவெகவில் இணைகிறார் என தகவல்கள் வெளியாவதால் இன்று சட்டசபை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கயிருப்பதாக சொல்லப்பட்டது.

இதற்காக அவர் ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம் வீட்டிலிருந்து சென்னைக்கு வந்து அங்கு ஆழ்வார்பேட்டை வீட்டில் தங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரிடமே தவெகவில் இணைகிறாரா என கேட்டதற்கு மறுப்பு தெரிவிக்காமல் பூசி மெழுகினார்.

அது போல் தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமாரிடம் இது குறித்து கேட்ட போது அவரும் மறுப்பு தெரிவிக்காமல் நழுவினார். இந்த நிகழ்வுகளெல்லாம் சந்தேகத்தை எழுப்புகிறது.

இல்லைனு சொல்லவில்லை

இந்த நிலையில் இன்று காலை தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்திக்கிறார் என சொல்லப்பட்டது. அதற்கேற்ப அதிமுக கொடி கட்டாத காரில் செங்கோட்டையன் தனது ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை திடீரென 15 நிமிடங்களில் மீண்டும் வீட்டுக்கே வந்துவிட்டார்.

செங்கோட்டையன் செய்வது

செங்கோட்டையன் செய்வதெல்லாம் புதிராக இருப்பதால் அவர் தவெகவில் இணைகிறாரா, இல்லை அதிமுகவை ஒன்றிணைக்க பாடுபடுகிறாரா என தெரியவில்லை. இதற்கேற்ப கடந்த திங்கள்கிழமை சென்னையில் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுத் தலைவர் ஓபிஎஸ் பேசுகையில், அதிமுக 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்துள்ளது.

டிசம்பர் 15 வரை கெடு

அதிமுகவின் இந்த நிலையை பார்த்து நாம் கண்ணீர் விடும் நிலை உள்ளது. வரும் டிசம்பர் 15 ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட போகிறோம்.

எனவே டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் அதிமுக ஒருங்கிணைப்பை நடத்தி இனியாவது திருந்த வேண்டும். இல்லாவிட்டால் திருத்தப்படுவீர்கள். எங்கள் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு எங்களை தள்ளி விடாதீர்கள் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

நீண்ட கால அரசியல்வாதி

செங்கோட்டையன் நீண்ட கால அரசியல் அனுபவம் உள்ளவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரச்சார வியூகங்களை வகுத்துத் தந்தவர். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. அரசியலில் நெளிவு சுளிவுகளை கற்றுத் தேர்ந்திருக்கிறார். எனவே அவரை எப்படியாவது தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டும் என சில கட்சிகளும் அவருக்கு பல்வேறு ஆஃபர்களை கொடுத்து வருகிறாராம்.

ஈரோடு மாவட்டம்

மேலும் வரும் 30ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்கிறாராம். எனவே அந்த தேதிக்குள் அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏதாவது ஒன்றை செய்ய வேண்டும், தனது அரசியல் வாழ்க்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என செங்கோட்டையன் விரும்புகிறாராம்.

கார் எங்கே

இதனால் நாளை அவரது கார் பனையூருக்கு செல்கிறதா, இல்லை வேறு ஏதாவது ஒரு ஏரியாவுக்கு செல்கிறதா, இல்லை மீண்டும் குள்ளம்பாளையத்திற்கே செல்கிறாரா என்பது போக போகத்தான் தெரியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+