திமுகவா தவெகவா? செங்கோட்டையன் பிளான் என்ன? திடீர் ட்விஸ்ட்..சேகர்பாபுவை சந்தித்து பேசியதால் பரபரப்பு
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், அவர் தவெகவில் இணையலாம் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திடீர் திருப்பமாக திமுக அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து பேசியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தவெகவில் இணைய உள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வரும் நிலையில், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து செங்கோட்டையன் தனது ராஜினாமா கடிதம் அளித்த நிலையில், சபாநாயகர் அறையில் அமைச்சர் சேகர் பாபுவை சந்தித்து பேசினார்.

திமுகவா இல்லை தவெகவா?
சுமார் 5 நிமிடங்கள் வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. செங்கோட்டையன் தவெகவில் இணைய இருப்பதாகவும் அவருக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் நேற்று முதல் அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் கிளம்பின. செய்தியாளர்கள் இது தொடர்பாக தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரிடம் செங்கோட்டையன் இணைகிறாரா? என்று கேட்ட போது பதில் எதுவும் அளிக்கவில்லை.
அதேபோல செங்கோட்டையனும் பதிலளிக்காமல் மவுனமாகவே கடந்து சென்றர். இதனால், செங்கோட்டையன் தவெகவில் இணையலாம் என்று பேச்சு வலுத்த நிலையில், இன்று திடீர் திருப்பமாக சேகர் பாபுவை சந்தித்து பேசியது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. செங்கோட்டையன் தவெகவில் இணைகிறாரா அல்லது திமுகவில் இணைகிறாரா என்ற சஸ்பென்ஸ் நீடிக்கிறது.
நாளை உதயநிதி பிறந்தநாள்
செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது ஒருநாள் பொறுத்து இருங்கள் என்று கூறினார். நாளை உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை திமுக உற்சாகமாக கொண்டாட உள்ளது. இதனால், நாளை உதயநிதி முன்னிலையில், செங்கோட்டையன் திமுகவில் இணைகிறாரா? அல்லது விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளாரா? என்பது பில்லியன் டாலர் கேள்வியாகவே நீடிக்கிறது.
சேகர் பாபுவும் செங்கோட்டையனும் ஒரு காலத்தில் அதிமுகவில் ஒன்றாக பயணித்தவர்கள். அந்த நட்பின் அடிப்படையிலும் இருவரும் சந்தித்து பேசியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. எனினும், செங்கோட்டையனோ சேகர் பாபுவோ இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
25 வயதில் அரசியலுக்கு வந்தவர்
கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு சக்திவாய்ந்த தலைவராக விளங்கிய செங்கோட்டையன் தவெகவில் இணைந்தால், கொங்கு மண்டலத்தில் அந்த கட்சி வலுப்பெறும் என்று அக்கட்சியினர் கருதுகின்றனர். எம்.ஜி.ஆர். காலத்தில் தனது 25-வது வயதிலேயே அரசியலுக்கு வந்தவர் செங்கோட்டையன். எம்.எல்.ஏ., அமைச்சர், அமைப்பு செயலாளர் என்று ஆட்சியிலும், கட்சியிலும் எல்லா பொறுப்புகளையும் வகித்தவர்.
ஜெயலலிதா காலத்திலும் அதிமுகவில் செல்வாக்கோடு விளங்கினார். இடையிடையே ஜெயலலிதா அவரை ஓரங்கட்டினாலும், கொங்கு மண்டலத்தின் அதிமுகவின் முக்கிய முகமாக செங்கோட்டையன் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டாலும், செங்கோட்டையன் நிதானமாகவே செயல்பட்டார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு அவரது அமைச்சரவையில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.
9 முறை எம்.எல்.ஏ பதவி
அ.தி.மு.க. வரலாற்றில் 9 முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற சிலரில் செங்கோட்டையனும் ஒருவர். கொங்கு மண்டலத்தில் தனிப்பட்ட செல்வாக்கோடு இருப்பவர். கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும், "நான் கட்சிக்காக செய்த தியாகத்துக்குப் பிறகும், குறைந்தபட்சம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை" என்று ஆதங்கப்பட்டார். அதன் பிறகு தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்திய நிலையில், இன்று எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
விஜய் வென்றதும் மக்கள் மீது திடீர் பாசமா? லதா ரஜினிகாந்தின் புதிய இயக்கத்தை சீண்டிய ப்ளூ சட்டை மாறன் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது! -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன?












Click it and Unblock the Notifications