தவெகவில் இருந்து செங்கோட்டையன் விலகுவார்.. நெருங்கிய நண்பர்களிடம் பேசுகிறாராம்.. சொல்வது விஜயபாஸ்கர்
சென்னை: தவெகவில் இருந்து செங்கோட்டையன் வெளியேறும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், தான் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாகவும், நீங்கள் அந்த தவறை செய்ய வேண்டாம் என அதிமுக முக்கிய தலைவர்கள் சிலரிடம் செங்கோட்டையன் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
8 முறை சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டுள்ள மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன். அவர், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து விஜய்யின் தவெகவில் இணைந்தார். செங்கோட்டையனுக்கு தவெகவில் உரிய மரியாதை இல்லை என்ற பேச்சு இருந்து வருகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அனைத்து கட்சிகளும் பம்பரமாய் சுழன்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அவரது கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர். அப்போது, செங்கோட்டையன், தவெகவில் இருந்து வெளியேறும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
எம்.ஆர் விஜயபாஸ்கர் பேசுகையில், தான் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டதாகவும், நீங்கள் அந்த தவறை செய்ய வேண்டாம் என்றும் அதிமுக முக்கிய தலைவர்கள் சிலரிடம் செங்கோட்டையன் கூறியுள்ளார். அந்தக் கட்சியில் செங்கோட்டையனுக்கு மரியாதை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
-
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மின் வெட்டு: "திட்டமிட்டு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி": அமைச்சர் நிர்மல்குமார் ஷாக் தகவல்! -
தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு! குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனை வரவேற்கத்தக்கது! - முதல்வர் விஜய் -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி? தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
செங் இஸ் கிங்.. பாஜக பாலிடிக்ஸை கையிலெடுத்த விஜய்! அலறும் கூட்டணி கட்சிகள்! கன் மாதிரி நிற்கும் தவெக -
நகராட்சி டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தும் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும்: தமிழ்நாடு அரசு அதிரடி! -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
விஜய் மேஜையில் இருக்கும் 4 ஃபைல்.. 'எஸ்' சொல்வாரா.. 'நோ' சொல்வாரா? கோட்டையில் அரங்கேறும் க்ளைமாக்ஸ் -
ஆட்சிக்கு வந்த 15வது நாளிலேயே.. விஜய்யின் ஆபரேஷன் விசில்! பாஜக ஸ்டைல்! தூக்கப்பட்ட அதிமுக MLAக்கள்












Click it and Unblock the Notifications