செங்கோட்டையன் வாயாலேயே சொல்லிட்டாரா அந்த விஷயம்? 200 நம்பர் ஆரூடம்.. கவனிக்கும் திராவிடக் கோட்டைகள்
சென்னை: செங்கோட்டையன் பேசியிருக்கும் கருத்துக்கள்தான் தற்போது தவெகவினருக்கு மிகுந்த குஷியையும், உற்சாகத்தையும் தந்து வருகிறது... , தமிழக வெற்றி கழகம் 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி 'விசில் புரட்சி' படைக்கும் என மூத்த தலைவர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.. ஆனால், செங்கோட்டையன் பேச்சுக்கு உடனடியாக ஓடிவந்து பதிலளித்துள்ளார் டாக்டர் தமிழிசை சவுந்ததரராஜன். இதனால் தமிழக அரசியல் களத்தில் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் கடந்த 23-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத அளவாக 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி ஒட்டுமொத்த தேசத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

தவெக விசில் புரட்சி
இந்த அதீத வாக்குப்பதிவு யாருக்குச் சாதகம், யாருக்குப் பாதகம் என்கிற விவாதங்கள் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் தமிழக வெற்றி கழகத்தின் மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பழனியில் இன்று ஆற்றிய உரையானது அரசியல் களத்தில் ஒரு புதிய புயலைக் கிளப்பியிருக்கிறது.
செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன், மிகவும் நிதானமாகவும் அதேசமயம் மிகுந்த நம்பிக்கையுடனும் பல்வேறு விஷயங்களை பேசியிருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் தொலைநோக்குச் சிந்தனைகளை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.. நாளை தமிழகத்தை ஆள வேண்டியவர் விஜய் தான் என்பது வெறும் அரசியல் விருப்பம் அல்ல, அது ஒட்டுமொத்த தமிழகத்தின் எண்ணமாக மாறியிருக்கிறது ..வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவரும்போது, அந்த வரிசையில் 'விசில் புரட்சி' என்ற புதியதொரு வரலாறு தமிழக மண்ணில் எழுதப்படும்.
செங்கோட்டையன் 200 தொகுதி நம்பிக்கை
விஜய்யின் தொலைநோக்கு சிந்தனை நாளை தமிழகத்தை ஆளும். மக்கள் ஒருமனதாக அவரைத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது அனைவரின் எண்ணமாகவும் உள்ளது. பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி, இனப்புரட்சி, சமூக புரட்சி போல் வரும் 4ம் தேதி தமிழகத்தில் விஜய்-இன் விசில் புரட்சி வர உள்ளது.
200-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழக வெற்றி கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும்" என்று நம்பிக்கையுடன் சொல்லி உள்ளார் செங்கோட்டையன்,
செங்கோட்டையனின் இந்த அபரிமிதமான நம்பிக்கையும், அவரது பேச்சில் இருந்த ஒரு ஒப்பீடு அனைவரையும் வியக்க வைத்தது. உலக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களைச் செய்த பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இனப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சி ஆகியவற்றுடன் இந்தத் தேர்தலை செங்கோட்டையன் ஒப்பிட்டது, கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
செங்கோட்டையனை பொறுத்தவரை, பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட ஒரு தலைவர், வெறும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசாமல், கள எதார்த்தத்தை உள்வாங்கிப் பேசியிருப்பதே ஆகும்.
கவனிக்கும் திராவிட கோட்டைகள்
இளைய தலைமுறை வாக்காளர்களின் எழுச்சியும், பாரம்பரிய வாக்கு வங்கிகளில் ஏற்பட்டுள்ள சரிவும் புதியதொரு ஆட்சி மாற்றத்திற்கு வித்திடலாம் என்பதே செங்கோட்டையனின் அரசியல் முதிர்ச்சியுள்ள பார்வையாக உள்ளது.
அதுமட்டுமல்ல, செங்கோட்டையன் போன்ற அரை நூற்றாண்டு கால அரசியல் அனுபவம் கொண்ட ஒரு தலைவரிடமிருந்து இத்தகைய கருத்துக்கள் வெளிவருவது சாதாரணமானதாகக் கருதப்பட முடியாது. வழக்கமாகத் தேர்தல் முடிந்த பிறகு கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிதான் வெற்றி பெறும் என்று சொல்வது இயல்பு. ஆனால், திராவிட அரசியலின் ஆணிவேராக இருந்த ஒரு தலைவர், ஒரு புதிய மாற்றத்தை நோக்கி மக்கள் நகர்வதை இவ்வளவு வெளிப்படையாக அங்கீகரிப்பது தமிழக அரசியலில் தார்மீக ரீதியான ஒரு பெரிய நகர்வை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி
ஆனால், செங்கோட்டையனின் இந்த பேச்சுக்கு பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். "விசில் சத்தம் வேறு, குண்டு... தம்பி விஜய் கொஞ்சம் இதை உணரணும். 4ம் தேதி வரை தவெகவினர் கனவு காணட்டும்... இப்போது ஆன்மீகத்தை தேடி செல்லும் விஜய் அதன்பிறகு ஷூட்டிங்கிற்கு இடம் தேட செல்வாரோ என்று சந்தேகமாக உள்ளது."என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் வாசலில் நிற்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர் யார் என்பதில் தெளிவு பிறந்துவிட்டதை இந்த வாக்குப்பதிவு சதவீதம் உணர்த்தும் நிலையில், செங்கோட்டையனின் கணிப்பு நிஜமாகுமா? அல்லது தமிழீசையின் வாக்கு பலிக்குமா? என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா












Click it and Unblock the Notifications