எங்க தலைவரு வந்துட்டார்யா.. குஷியில் பாஜக! 'சனாதன' சண்டையில் 'தத்துவ' விளக்கம் தரும் எச். ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: , சனாதனம் என்றால் என்ன என தெரியாத முட்டாள்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்; சனாதனம் பற்றி தெரிந்த அறிஞர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர் என்கிறார் மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா.

சனாதன ஒழிப்பு என்ற தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கம் சர்ச்சையானது குறித்த எச்.ராஜா தெரிவித்துள்ள கருத்துகள்:

Senior BJP Leader H. Raja explains What is Sanatana Dharma?

கடந்த 3 நாட்களாக சனாதன தர்மம் பற்றி, சனாதனம் என்றால் என்ன என தெரியாத முட்டாள்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சனாதனம் என்றால் என்ன என தெரிந்த அறிஞர்கள் கண்டனம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். திரிணாமுல் காங்கிரஸின் மமதா பானர்ஜி, காங்கிரஸின் கரண் சிங், சிவசேனா உத்தவ் தாக்கரே உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

உதயநிதி மாதிரியான 'அரை குறை விடலைகள்' பேசினா "இந்தியா" கூட்டணி எப்படியும் சிதறித்தான் போகும் என நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை. இதில் தீய சக்தி திருமாவளவன் போன்றவர்கள், நிலையானது சனாதனம் என்கின்றனர். அதைத்தான் உதயநிதியும் பேசி இருக்கிறார்.

நாங்கள்தான் நிலையற்றதாக மாற்றினோம் அதுதான் பகுத்தறிவு என்கின்றனர். அதெல்லாம் சரி.. என் கேள்விக்கு முதலில் பதில் சொல்லட்டும்.
தாய் என்கிற உறவு இருக்கிறது. நிலையானது. சகோதரி உறவு நிலையானது. மனைவி உறவு நிலையானது. இதில் எதை மாற்றப் போகிறீர்கள்? மானங்கெட்ட கூட்டம் இது. ஆகையால் சனாதன தர்மத்தைப் பற்றி பேசியவர்கள் நிச்சயமாக உச்சநீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். தண்டிக்கப்படுவார்கள். இங்க இருக்கிற போலீஸ், கோர்ட்டை வைத்து பாஜகவை மிரட்டப் பார்க்கின்றனர். அது நடக்காது. அதெல்லாம் மலையேறிய காலம்.

மீ டூவில் வைமுரத்து, எம்ஜே அக்பர் போன்றவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள். இவர்களில் எம்ஜே அக்பர் ராஜினாமா செய்துவிட்டார். வள்ளுவர் சொன்னதைத்தானே உதயநிதி சொன்னார் என்கிறார் வைரமுத்து. கண்ணன் கீதையில் சொன்னதையே வள்ளுவர் திருக்குறளில் சொன்னார். பிறப்பின் அடிப்படையில் எந்த வேறுபாட்டையும் கண்ணன் சொல்லவில்லை. இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது சனாதன தர்மம் குறித்து மத்திய அமைச்சர்கள் பதில் தர வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார் என்கின்றன டெல்லி தகவல்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+