அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லாமல் செல்ல அரசின் சூப்பர் சான்ஸ்.. ஜூலையில் இதை மட்டும் பண்ணுங்க போதும்
சென்னை: தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளுக்கு முதியோர்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்யும் திட்டம் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முதல்கட்ட அறுபடை தரிசன பயணம் தொடங்கவுள்ளதால் விருப்பம் உள்ளவர்கள் ஜூலை முதல் வாரத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் கடவுளாக போற்றப்படுபவர் முருகப் பெருமான். முருகன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது அவருடைய அறுபடை வீடுகள்தான். ஒவ்வொரு முருக பக்தருக்கும் அறுபடை வீடுகளுக்கு சென்று வர வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய ஆசையாக இருக்கும்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆண்டுதோறும் முருகனின் அறுபடை வீடுகளுக்கு முதியோர்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டு தரிசனம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றிற்கு 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர் தரிசனத்திற்காக கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் பக்தர்கள் ஐந்து கட்டமாக அறுபடை வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இந்தப் பயணத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட பயணப் பைகள் வழங்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை முழுமையாகச் செய்கிறது.
ஓராண்டில் 5 கட்டமாக முதியோர் அழைத்துச் செல்லப்படுகின்றனர். ஒவ்வொரு கட்டத்திலும் 200 பக்தர்கள் இந்த கட்டணமில்லா பயண தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆண்டு அறுபடை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் இந்த ஆன்மிகப் பயணத்திற்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் பயணத்திற்கு வரும் பக்தர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான முதல்கட்ட அறுபடை தரிசன பயணம் ஜூலை மாதம் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்திற்கான அறிவிப்புகள் இந்து சமய அறநிலையத் துறை இணையதளத்தில் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளன. அறுபடை தரிசனத்திற்குச் செல்ல விரும்பும் பக்தர்கள் அந்த இணையதளத்திலேயே விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு கட்டத்திலும் 400 பக்தர்களை அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் 60 வயதை பூர்த்தி செய்திருப்பது அவசியமாகும். அறுபடை தரிசனம் போல, ஆடி மாதத்தில் அம்மன் கோவில் ஆன்மிக தரிசன பயணமும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்கள் தரிசன பயணமும் தொடங்கப்படவுள்ளது. இந்தப் பயணங்களுக்கான அறிவிப்புகளும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications