திமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி- வழக்கமான பரிசோதனை
சென்னை: திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் வழக்கமான பரிசோதனைகளுக்காகவே மருத்துவமனையில் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் கடந்த ஆண்டு நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்குப் பின்னர் துரைமுருகன் வீடு திரும்பினார்.

பின்னவர் அவ்வப்போது பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்தார் துரைமுருகன். இந்நிலையில் இன்று துரைமுருகன் மீண்டும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து கருத்து தெரிவித்த துரைமுருகன் மகனும் வேலூர் திமுக எம்.பி.யுமான கதிர் ஆனந்த், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார்; இன்று இரவு அல்லது நாளை வீடு திரும்புவார் என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications