செந்தில் பாலாஜிக்கு 90 சதவீத பிளாக்னு யார் சொன்னது? ஆஞ்சியோ ரிப்போர்ட் வெளியானதா.. சீனியர் கேள்வி
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த அறிக்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஒன் இந்தியா அரசியல் தளத்திற்கு பத்திரிகையாளர் குபேந்திரன் கூறியிருப்பதாவது: செந்தில் பாலாஜிக்கு புதன்கிழமை பைபாஸ் சர்ஜரி என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

இதில் என்ன சிக்கல் என்றால் இன்னும் வெளிப்படைத்தன்மையாக செந்தில் பாலாஜிக்கு என்ன பிரச்சினை என்ற கேள்வி எழுகிறது. அவருக்கு இதயத்தில் அடைப்பு இருக்கிறது என்றால் 90 சதவீதத்திறகு மேல் இருந்தால்தான் பைபாஸ் செய்வார்கள். இல்லாவிட்டால் ஸ்டன்ட் வைத்து விடுவார்கள்.
ஓமந்தூரார் மருத்துவமனையின் தகவலின் படி ஒரு அடைப்பு 90 சதவீதம், 2ஆவது அடைப்பு 70 சதவீதம் , 3ஆவது அடைப்பு 50 சதவீதம். இந்த 90 சதவீத அடைப்பை அமலாக்கத் துறை ஏற்க மறுப்பது வினோதமாக இருக்கிறது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ரிப்போர்ட் தவறு என கூறி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கஸ்டடியில் எடுக்க நீதிமன்றத்தில் அனுமதி கேட்டது. ஆனால் அவரை சந்தித்து விட்டு வந்த அனைவருமே செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக இல்லை என்றுதான் சொல்கிறார்கள்.
இப்படி இருக்கும் போது விசாரணை நடைபெறாது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் குழு செந்தில் பாலாஜியை சோதனை செய்து பார்த்துவிட்டு அவருக்கு 80 சதவீதத்தை விட குறைவாகவே அடைப்பு இருக்கிறது என சொன்னால் இது அவருக்குத்தான் சிக்கல். பொதுவாக இதயத்தில் அடைப்பு இருந்தால் எந்த அறிகுறியும் இல்லாதோருக்கு ஓராண்டு கழித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
90 சதவீதத்திற்கு மேல் அடைப்பு இருந்தால் மூச்சு வாங்கும், நடக்கவே முடியாது. இப்படி இருப்பவர்களைத்தான் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுவார்கள். செந்தில் பாலாஜியிடம் இருந்து பெற வேண்டிய தகவல்கள் என்னென்ன என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகள் எழுதி வைத்திருப்பார்கள். அவருடைய தம்பி லண்டனில் இருக்கிறார். அவர் வந்து அமலாக்கத் துறையிடம் ஆஜரானால் செந்தில் பாலாஜிக்கு அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது.
எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து ஓமந்தூரார் அறிக்கை தவறு என கூறினால் திமுக அரசுக்கும் தமிழக சுகாதாரத் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படும் நிலையில் இந்த ரிஸ்க்கை மருத்துவர்கள் எடுத்திருப்பார்களா என கேட்கிறீர்கள். ஆனால் இது போல் செந்தில் பாலாஜிக்கு அடைப்பு இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவர்கள் யாருமே வெளிப்படையாக சொல்லவில்லை. அது போல் காவேரி மருத்துவமனையும் வெளிப்படையாக அடைப்பு சதவீதத்தை அறிவிக்கவில்லை. எனவே எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால்தான் சிக்கல்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் எடுத்த ஆஞ்சியோ கிராம் அறிக்கையை வெளியிட்டால் எல்லா பிரச்சினைக்கும் முடிவு வரும். அறிக்கையை கோர்ட்டிலோ அல்லது அமலாக்கத் துறையிலோ கொடுத்திருந்தால் எப்படி செந்தில் பாலாஜியை 8 நாட்கள் அமலாக்கத் துறை காவலுக்கு செல்ல நீதிமன்றம் அனுமதித்திருக்கும்?
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications