கரூரில் மட்டும் ஏன்.. துளியும் மனசாட்சியின்றி கேட்கிறார் விஜய.. லிஸ்ட் போட்ட மூத்த பத்திரிக்கையாளர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் வெளியிட்ட வீடியோ குறித்து மூத்த பத்திரிக்கையாளர் செந்தில் வேல் கூறுகையில், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று துளியும் மனசாட்சியின்றி கேட்கிறார் விஜய்.... மதுரை மாநாட்டில் மூச்சுத் திணறி ஒரு இளைஞன் இறந்தான்.. நாமக்கல்லில் 40 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி... 4 பேர் கவலைக்கிடமாக இருந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. விக்கிரவாண்டியில் 400 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றார்.

கரூர் வேலுச்சாமி புரத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த நெரிசல் ஏற்பட்டதில் சதி இருப்பதாக திமுகவை குற்றம்சாட்டி தவெகவினர் வீடியோ வெளியிட்டனர். ஆனால் முழுக்க முழுக்க விஜய் தாமதமாக வந்ததும், போலீஸ் கூறியதை புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா கேட்காததே காரணம் என்றும் அரசு விளக்கம் அளித்தது.

Senior journalist says Vijay is asking without any conscience why this happened only in Karur

இந்நிலையல் நடிகர் விஜய், சம்பவம் நடந்த 3 நாட்கள் கழித்து விளக்க வீடியோ வெளியிட்டார். அதில் நடிகர் விஜய் கூறுகையில், "கிட்டத்தட்ட 5 மாவட்டங்களில் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும். மக்களுக்கு எல்லாம் உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள் உண்மையைச் சொல்லும் போது, கடவுளே நேரில் வந்து இறங்கி உண்மையைச் சொல்வது போல் இருந்தது. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்.

எங்களுக்குத் தரப்பட்ட இடத்தில் நாங்கள் பேசினோம். அதைத் தவிர நாங்கள் வேறேதும் செய்யவில்லை. ஆனால் எங்கள் கட்சியின் தோழர்கள், நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் போட்டு கைது செய்கிறார்கள். சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தோரையும் கைது செய்கிறார்கள்.

சிஎம் சார் உங்களுக்கு என்னை ஏதாவது பழிவாங்கும் எண்ணம் இருந்திருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் ஒன்று வீட்டில் இருப்பேன். இல்லாவிட்டால் ஆஃபீஸில் இருப்பேன்" என்று கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் மூத்த பத்திரிக்கையாளர் செந்தில் வேல் கூறுகையில், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது என்று துளியும் மனசாட்சியின்றி கேட்கிறார் விஜய்.... மதுரை மாநாட்டில் மூச்சுத் திணறி ஒரு இளைஞன் இறந்தான்.. நாமக்கல்லில் 40 பேர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதி... 4 பேர் கவலைக்கிடமாக இருந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது...

விக்கிரவாண்டியில் 400 க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர் நல் வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை.. கரூரில் இவை எல்லை மீறிச் சென்று விட்டன... கொஞ்சமும் பொறுப்பின்றி பேசும் விஜய் ஆர் எஸ் எஸ் பாஜக வை விட பன் மடங்கு ஆபத்தானவர்" இவ்வாறு கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+