எடப்பாடி பழனிசாமிக்கு இனிமேல் தான் பல சோதனைகள்! சுதந்திர பறவையாக செயல்பட முடியாது! -தராசு ஷியாம்
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு இனி மேல் தான் பல சோதனைகள் காத்திருப்பதாகவும் அவரால் சுதந்திர பறவையாக செயல்பட முடியாது எனவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.
பாஜகவோடு சேர்ந்து பயணித்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

எடப்பாடி வெற்றி
அதிமுக வரலாற்றில் எடப்பாடி பழனிசாமியை போல் அக்கட்சியின் பொதுச்செயலாலராக பதவியேற்றுக் கொண்ட நிகழ்வை இதுவரை தாம் பார்த்ததில்லை என்று கூறிய மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் எப்படி பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்துள்ள வெற்றி தான் இது எனக் கூறினார். ஆனால் அதற்காக அவரால் ஜெயலலிதாவுக்கு இணையாக சுதந்திரமாக எந்த முடிவுகளையும் எடுக்க முடியும் என்று கூற இயலாது என்றும் தெரிவித்தார்.

பாஜகவோடு பயணம்
பாரதிய ஜனதா கட்சியோடு சேர்ந்து பயணித்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு இருக்கும் என தாம் கருதுவதாகவும் ஆனால் அண்ணாமலை பேசுவதை பார்த்தால் அதற்கும் இனி வழியிருக்காது போல் தோன்றுவதாகவும் கூறினார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு இனி மேல் தான் பல சோதனைகள் காத்திருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் தனிக்கட்சி
இதனிடையே மக்கள் மன்றத்தில் இன்னும் எடப்பாடி பழனிசாமி தனது ஆளுமையை நிரூபிக்கவில்லை என்றும் அவர் தலைமையில் அதிமுக சந்தித்த தேர்தல்கள் அனைத்திலும் தோல்வி மட்டும் கிடைத்திருப்பதையும் சுட்டிக்காட்டினார். ஓ.பன்னீர்செல்வம் தனிக்கட்சி தொடங்கி டிடிவி தினகரன், சசிகலா, பாஜக ஆகியோர் ஒன்றுபட்டு தேர்தலை சந்தித்தால் அதிமுகவின் வாக்குவங்கி மேலும் சரியக்கூடும் என்றார்.

சட்டப்போராட்டம்
ஓ.பன்னீர்செல்வம் இன்னும் தனது சட்டப் போராட்டத்தை தொடருவார் என்றும் அவ்வளவு எளிதாக சட்டப் போராட்டம் முடிவுக்கு வராது எனவும் தராசு ஷியாம் தெரிவித்தார். இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு இனி மேல் தான் பல சோதனைகள் காத்திருப்பதாக தராசு ஷியாம் கூறியிருக்கும் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications