"பச்சை சிக்னல்" வந்தாச்சு போலயே.. சசிகலாவை சந்தித்து பேசிய மெகா "புள்ளி".. வெலவெலக்கும் அதிமுக
அன்வர் ராஜா சசிகலா சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது
சென்னை: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜாவை பற்றி, உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கசிந்து கொண்டிருக்கிறது.. இந்த விஷயத்தை கேட்டு அதிமுக கூடாரமே வெலவெலத்து போயுள்ளதாம்..!
Recommended Video

அன்வர்ராஜா.. அதிமுகவின் மூத்த தலைவர்.. எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி என 3 ஆட்சி தலைவர்களிடமும் பொறுப்பில் இருந்தவர்.. பல சமயங்களில் இவரது துணிச்சல் பேச்சு அபாரமானவை!
கட்சியில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கியதன் சர்ச்சை இப்போது வரை நீங்கவில்லை.. இதுவும் பாஜகவின் அழுத்தம் என்றார்கள் சிலர்..

அதிமுக
மேலும் சிலரோ, சசிகலாவை ஆதரித்ததால்தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்றார்கள்.. இன்னொரு பேச்சும் உள்ளது, தனிப்பட்ட முறையில் தன்னை தாக்கிய கோபம் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தாலும், முன்னாள் அமைச்சர்களின் அழுத்தமும் அன்வர் ராஜாவை நீக்க காரணமாக இருக்கும் என்றார்கள். ஆக மொத்தம், அன்வர் ராஜா பதவி நீக்கம் இப்போதுவரை ஒரு விவாதமாகவே நடந்து கொண்டிருக்கிறது.

எதிர்பார்ப்பு
மற்றொரு புறம் அன்வர் ராஜாவின் மவுனம் பெருத்த சந்தேகத்தை கிளப்பியது.. கட்சியில் இருந்து இவர் நீக்கப்பட்டதுமே, சசிகலாவை சென்று சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், அவர் செல்லவில்லை.. அப்படியானால் திமுக பக்கம் செல்வார் என்று முணுமுணுக்கப்பட்டது.. அதுவும் நடக்கவில்லை.. அன்வர் ராஜா திமுகவுக்குதான் சேர வேண்டும் என்று நினைத்திருந்தால், அதை எப்போதோ செய்திருக்கலாம்.. இன்றைய தேதி வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்லப்பட்டது.

அதிமுக
எனினும், அன்வர்ராஜாவை திமுக பக்கம் இவரை இழுக்க தூது படலங்கள் ஆரம்பித்ததாகவும், அதற்கான அசைன்மென்ட்டை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் தரப்பட்டதாகவும் கூட சொல்லப்பட்டது.. இவ்வளவும் நடந்து கொண்டிருந்தாலும் அன்வர் ராஜாவை பற்றின எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.. செய்தியாளர்களையும் அவர் சந்திக்கவில்லை.. எனவே மிகப்பெரிய முடிவில் யோசனையில் அன்வர் ராஜா ஈடுபட்டிருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது. அந்த யூகம் வீண் போகவில்லை..

எடப்பாடி பழனிசாமி
எதிர்பார்த்தபடியே, சசிகலாவை சென்று சந்தித்திருக்கிறார் அன்வர்ராஜா.. இதுதான் அந்த ஹாட் நியூஸ்.. கட்சியின் முடிவுகளுக்கு எதிராக பேசமாட்டேன் என்று அன்வர்ராஜா கடிதம் தந்தால், அதிமுகவில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார் என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார்... ஆனால், அதனை அன்வர்ராஜா ஏற்கவில்லை என தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த வாரம் சசிகலாவை சந்தித்துள்ளார் அன்வர்ராஜா.

சசிகலா
அந்த சந்திப்பின் போது, பரஸ்பரம் இருவரும் உடல்நலம் விசாரித்துக் கொண்டனர். இதனையடுத்து, நிறைய அரசியல் விவகாரங்களை பேசிய அன்வர், "வெளிப்படையாக உங்களோடு இணைந்து அரசியல் செய்ய வந்து விடுகிறேன் அம்மா " என்று சொன்னாராம்.. ஆனால் சசிகலாவோ, "நீங்க ஏன் இங்கு வரணும்? அங்கேயே இருங்க. நான் அங்கு வந்துவிடுவேன் " என்று சொல்லியுள்ளார் போலும்.. சசியை தான் சந்தித்ததை மிக ரகசியமாக வைத்திருக்கிறாராம் அன்வர் ராஜாவும்.

சசிகலா
"நான் அங்கு வந்துவிடுவேன்" என சசிகலா சொல்லியிருப்பது, அதிமுகவிற்கு வந்து விடுவேன் என்ற பொருளில் பேசியுள்ளார்.. அவர் நம்பிக்கையாக அப்படி சொல்லியிருப்பதால் அதிமுகவை கைப்பற்றுவதில் ஏதோ ஒரு உறுதியான விஷயம் நடந்திருக்கிறது அல்லது அவருக்கு டெல்லியிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள் சசி வட்டாரங்கள்... இது தெரிந்துதான் அதிமுக கூடாரம் நடுங்கி போய் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றன..!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications