ஸ்டாலின் "அவரை" ஏன் இன்னும் கைது செய்யல.. கொளுத்தி போட்ட புகழேந்தி.. கதிகலங்கும் அதிமுக
முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி குறித்து புகழேந்தி கருத்து சொல்லி உள்ளார்
சென்னை: "நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சியையும் அதிமுக வெல்லாது.. நீங்க வேணும்னா பாருங்க.. தேர்தலுக்கு பிறகு கட்சிக்குள் புரட்சி வெடிக்கும்" என்று மூத்த தலைவர் புகழேந்தி ஆரூடம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி , ஓ .பன்னீர்செல்வம் மீது தொடுத்த மானநஷ்ட வழக்கு தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜரானார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது சொன்னதாவது: "முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி, ஓபிஎஸ் மீது நான் தொடுத்துள்ள மான நஷ்ட வழக்கு வரும் டிசம்பர் 11-ம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.. ஆர்வத்துடன் அந்த தீர்ப்பிற்காக காத்துள்ளேன்... சரித்திரம் வாய்ந்த தீர்ப்பாக அது நிச்சயம் அமையும்.

பொதுக்குழு
இன்றைய அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக பேசுவதாக சொல்லி உள்ளனர்.. கோர்ட் உத்தரவை மீறி இந்த விவகாரம் தொடர்பாக பேசுகின்றனர்... இவர்கள் ஒருங்கிணைப்பாளரா என்பதற்கான வழக்கே நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளது. தேர்தல் ஆணையம் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட முடியாது. அதிமுகவின் பொதுக்குழு கூடினால் அது நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக அமையும்.

பரிதாப நிலை
சசிகலா போட்டி பொதுக்குழுவை கூட்ட வாய்ப்புள்ளது.. பரிதாப நிலையில் அதிமுக இப்போதைக்கு உள்ளது. பொதுக்குழுவை கூட்ட ஓபிஎஸ் எடப்பாடிக்கு உரிமை இல்லை . பொதுக்குழுவில் எடுக்கும் முடிவு நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாக அமையும்... தேர்தலில் தோற்று கட்சியே அசிங்கமாக இருக்கும் நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தேவையா? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சீட்டு கேட்கும் மனநிலையிலேயே நிர்வாகிகள் இல்லை. கொள்ளை அடித்த முன்னாள் அமைச்சர்கள் வேண்டுமானால் அதிமுக சார்பில் போட்டியிடட்டும்.

மாநகராட்சி
நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு சில இடங்களே அதிமுகவிற்கு கிடைக்கும். கோவை , சேலம் உட்பட ஒரு மாநகராட்சியும் அதிமுக வெல்லாது... நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெறும் தகுதியுடன், குறையற்ற ஆட்சியை ஸ்டாலின் நடத்தி வருகிறார். .. தஞ்சையில் மழை வெள்ளம் பாதித்த பகுதியை பயந்து பயந்து இரவில் சென்று பார்வையிடுகிறார் எடப்பாடி.. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 90 விழுக்காடு பணத்தை எடப்பாடி பழனிசாமி கொள்ளை அடித்தார்.

வருத்தம்
ஊழலில் ஈடுபட்டவர்களை இன்னும் கைது செய்யவில்லை என திமுக மீது வருத்தம் உள்ளது... சசிகலா தங்களுக்கு முன்பாக ஆய்வு செய்துவிடுவாரோ என்ற பயத்தில் ஓபிஎஸ், எடப்பாடி பல இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். சசிகலாவை ஏற்றால் மட்டுமே கட்சி நிலைக்கும். சசிகலாவை கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் ஒப்புக் கொள்வார். நகர்ப்புற தேர்தலின் பிறகு கட்சிக்குள் புரட்சி வெடிக்க வாய்ப்பு உள்ளது.

சமாதி
தற்போது சட்டம் ஒழுங்கு பாதிப்பு பெரிதாக இல்லை.. 700 விவசாயிகளின் சமாதியில் எழுதப்பட்டதுதான் வேளாண் சட்டம் வாபஸ் என்பது... திமுகவில் இணைவதே இல்லை என பேசவில்லை.. என்னுடைய கட்சிக்காக பேசுகிறேன்.. சசிகலாவை இருவரும் தேடிச் சென்று கட்சியில் இணைக்க வேண்டும். சசிகலாவை கட்சியில் இணைப்பது தொடர்பாக ஓபிஎஸ் மனநிலை வானிலை போல அவ்வப்போது மாறும். சசிகலா பெயரை வைத்து கட்சிக்குள் நாடகமாடுகிறார் ஓபிஎஸ்.

ஜெயலலிதா
சர்வாதிகாரம் செய்ததாக ராமதாசை கைது செய்தார் ஜெயலலிதா, ஆனால் அவருடன் கூட்டணி வைத்துள்ளனர் இன்று.. சாதி பற்றி அறியாதவர் கே.பி.முனுசாமி... அவர் சாதி பேசியதால்தான் ஜெயலலிதாவால் சில காலம் வெளியேற்றப்பட்டார்.. கேபி முனுசாமி சாதி தலைவர். பாமக தொடர்பாக அவர் ஒருபோதும் பேசமாட்டார்... கட்சியில் தற்போது ஆட்சி மன்ற குழு கூடுவதே இல்லை. நீதிமன்ற தீர்ப்பு வரும் முன்பே நிர்வாகிகளை ஓபிஎஸ், இபிஎஸ் நீக்கி வருவது போல, சசிகலாவும் மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர்களை நீக்க முடியும்... அதிமுகவில் செயல்படாத நிர்வாகிகளை நீக்க சசிகலாவுக்கும் உரிமை உண்டு" என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications